இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருவெள்ளறை |
| 1367 | வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ!-நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரியே- மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி தென்றல் மா மணம் கமழ்தர வரு திரு வெள்ளறை நின்றானே (1) | |
|
| |
|
|
| 1368 | வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் இசை கொள் வேத-நூல் என்று இவை பயந்தவ னே!-எனக்கு அருள்புரியே- உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின்வாய திசை எலாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே (2) |
|
|
| |
|
|
| 1369 | வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவாக் கையில் நீள் உகிர்ப் படை-அது வாய்த்தவ னே!-எனக்கு அருள்புரியே- மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள் தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே (3) | |
|
| |
|
|
| 1370 | வாம் பரி உக மன்னர்-தம் உயிர் செக ஐவர்கட்கு அரசு அளித்த காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!-நின் காதலை அருள் எனக்கு- மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில் வாய்-அது துவர்ப்பு எய்த தீம் பலங்கனித் தேன்-அது நுகர் திரு வெள்ளறை நின்றானே (4) | |
|
| |
|
|
| 1371 | மான வேல் ஒண் கண் மடவரல் மண்-மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில் ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவ னே!-எனக்கு அருள்புரியே- கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திரு வெள்ளறை நின்றானே (5) | |
|
| |
|
|
| 1372 | பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்தளிப்பான் அங்கு ஓர் ஆமை-அது ஆகிய ஆதி!-நின் அடிமையை அருள் எனக்கு- தங்கு பேடையோடு ஊடிய மதுகரம் தையலார் குழல் அணைவான் திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திரு வெள்ளறை நின்றானே (6) | |
|
| |
|
|
| 1373 | ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி அரக்கன்-தன் சிரம் எல்லாம் வேறு வேறு உக வில்-அது வளைத்தவ னே!-எனக்கு அருள்புரியே- மாறு இல் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திரு வெள்ளறை நின்றானே (7) | |
|
| |
|
|
| 1374 | முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவ னே!-எனக்கு அருள்புரியே- மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடைச் சுரும்பு இனங்கள் தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திரு வெள்ளறை நின்றானே (8) | |
|
| |
|
|
| 1375 | ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல்-இடம் முழுதினையும் பாங்கினால் கொண்ட பரம!-நின் பணிந்து எழு வேன் எனக்கு அருள்புரியே- ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறித் தீம் குயில் மிழற்றும் படப்பைத் திரு வெள்ளறை நின்றானே (9) | |
|
| |
|
|
| 1376 | மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை-அதன் மேய அஞ்சனம் புரையும் திரு உருவனை ஆதியை அமுதத்தை நஞ்சு உலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐஇரண்டும் எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமை யோர்க்கு அரசு ஆவர்களே (10) | |
|
| |
|
|