நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

திருவரங்கம்: 1
1377உந்திமேல் நான்முகனைப் படைத்தான் உலகு உண்டவன்
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்-
சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே             (1)
   
1378வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன் மணி நீள் முடி
பை கொள் நாகத்து அணையான் பயிலும் இடம் என்பரால்-
தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலைச்
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே             (2)
   
1379பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர
கொண்ட ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்-
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே             (3)
   
1380விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால்-
துளைக் கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன
்திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே             (4)
   
1381வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
அம்பு-தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால்-
உம்பர்-கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல
்செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (5)
   
1382கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய் மகள் தாய் என
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால்-
குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்து உந்தி முன்
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே            (6)
   
1383கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால்
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால்-
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென் அரங்கமே             (7)
   
1384ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய
் தானும்ஆய தரணித் தலைவன் இடம் என்பரால்-
வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல
்தேனும் பாலும் கலந்தன்னவர் சேர் தென் அரங்கமே             (8)
   
1385சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையன் ஆய இம்
மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால்-
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிர
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே            (9)
   
1386அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக்
கல்லின் மன்னு மதிள் மங்கையர்-கோன் கலிகன்றி சொல
்நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன்
வல்லவர்-தாம் உலகு ஆண்டு பின் வான் உலகு ஆள்வரே             (10)