| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருவரங்கம்: 3 | 
					
			
			
      | | 1397 | கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கருமணியை மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை
 எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த
 அம்மானை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1398 | பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால் ஊரானை கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு
 கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு
 ஆராது என்று இருந்தானைக் கண்டது-தென் அரங்கத்ே்\"த             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1399 | ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும ்தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும்
 தேன் ஆகி அமுது ஆகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்
 ஆன்-ஆயன் ஆனானைக் கண்டது-தென் அரங்கத்தே            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1400 | வளர்ந்தவனைத் தடங் கடலுள் வலி உருவில் திரி சகடம் தளர்ந்து உதிர உதைத்தவனை தரியாது அன்று இரணியனைப்
 பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டிப் பண்டு ஒருநாள்
 அளந்தவனை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1401 | நீர் அழல் ஆய் நெடு நிலன் ஆய் நின்றானை அன்று அரக்கன்- ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே
 பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய் பின் மறையோர் மந்திரத்தின்
 ஆர் அழலால் உண்டானைக் கண்டது-தென் அரங்கத்தே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1402 | தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் தவ நெறியை தரியாது கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை
 வெம் சினத்த கொடுந் தொழிலோன் விசை உருவை அசைவித்த
 அம் சிறைப் புள் பாகனை யான் கண்டது-தென் அரங்கத்தே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1403 | சிந்தனையை தவநெறியை திருமாலை பிரியாது வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர்
 கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
 அந்தணனை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1404 | துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லாச் சமணர்க்கும் அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த
 எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும்
 அமரர்க்கும் பிரானாரைக் கண்டது-தென் அரங்கத்தே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1405 | பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந் நின்ற வித்தகனை
 மை வண்ணம் கரு முகில்போல் திகழ் வண்ணம் மரகதத்தின்
 அவ் வண்ண வண்ணனை யான் கண்டது-தென் அரங்கத்தே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1406 | ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானைக் காமரு சீர்க் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர்
 நா மருவு தமிழ்-மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
 தாம் மருவி வல்லார்மேல் சாரா தீவினை தாமே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |