இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருவிண்ணகர்:2 |
| 1457 | பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன் ஐம்புலன்கள் கடன் ஆயின வாயில் ஒட்டி அறுத்தேன் ஆர்வச் செற்றம் அவை-தம்மை மனத்து அகற்றி வெறுத்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (1) |
|
|
| |
|
|
| 1458 | மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி இல் மனத்தால் இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பைக் குழியில் பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா சிறந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே (2 | |
|
| |
|
|
| 1459 | மான் ஏய் நோக்கியர்-தம் வயிற்றுக் குழியில் உழைக்கும் ஊன் ஏய் ஆக்கை-தன்னை உதவாமை உணர்ந்து உணர்ந்து- வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த தேனே!-நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (3) | |
|
| |
|
|
| 1460 | பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து செறிந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே (4) | |
|
| |
|
|
| 1461 | பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை-தன்னை வேண்டேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (5) | |
|
| |
|
|
| 1462 | கல்லா ஐம்புலன்கள்-அவை கண்டவாறு செய்யகில்லேன் மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த வில்லா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (6) | |
|
| |
|
|
| 1463 | வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய் ஆறா வெம் நரகத்து அடியேனை இடக் கருதி கூற ஐவர் வந்து குமைக்கக் குடிவிட்டவரைத் தேறாது உன் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (7) |
|
|
| |
|
|
| 1464 | தீ வாய் வல் வினையார் உடன் நின்று சிறந்தவர்போல் மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார் மூவா வானவர்-தம் முதல்வா மதி கோள் விடுத்த தேவா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (8) | |
|
| |
|
|
| 1465 | போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம் கோதா கோது இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த தூதா தூ மொழியாய் சுடர்போல் என் மனத்து இருந்த வேதா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (9) | |
|
| |
|
|
| 1466 | தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்-கோன் மருவார் ஊன் ஆர் வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார் கோன் ஆய் வானவர்-தம் கொடி மா நகர் கூடுவரே (10) | |
|
| |
|
|