இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருநறையூர்:2 |
| 1487 | கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர் துளங்கல் தீர நல்கு சோதிச் சுடர் ஆய வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்- நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும்-நறையூரே (1) | |
|
| |
|
|
| 1488 | முனை ஆர் சீயம் ஆகி அவுணன் முரண் மார்வம் புனை வாள் உகிரால் போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்- சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக் குயில் கூவும் நனை ஆர் சோலை சூழ்ந்து அழகு ஆய-நறையூரே (2) | |
|
| |
|
|
| 1489 | ஆனை புரவி தேரொடு காலாள் அணிகொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றான் ஊர்- மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து நானப் புதலில் ஆமை ஒளிக்கும்-நறையூரே (3) | |
|
| |
|
|
| 1490 | உறி ஆர் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு வெறி ஆர் கூந்தல் பின்னை-பொருட்டு ஆன் வென்றான் ஊர்- பொறி ஆர் மஞ்ஞை பூம் பொழில்தோறும் நடம் ஆட நறு நாள்மலர்மேல் வண்டு இசை பாடும்-நறையூரே (4) | |
|
| |
|
|
| 1491 | விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய் நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர்- பெடையோடு அன்னம் பெய்வளையார்-தம் பின் சென்று நடையோடு இயலி நாணி ஒளிக்கும்-நறையூரே (5) | |
|
| |
|
|
| 1492 | பகு வாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு புகு வாய் நின்ற போதகம் வீழப் பொருதான் ஊர்- நெகு வாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின் நகு வாய் மலர்மேல் அன்னம் உறங்கும்-நறையூரே (6) | |
|
| |
|
|
| 1493 | முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்த அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர்- பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி நந்து வாரும் பைம் புனல் வாவி-நறையூரே (7) | |
|
| |
|
|
| 1494 | வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர்- கொள்ளைக் கொழு மீன் உண் குருகு ஓடி பெடையோடும் நள்ளக் கமலத் தேறல் உகுக்கும்-நறையூரே (8) | |
|
| |
|
|
| 1495 | பாரை ஊரும் பாரம் தீரப் பார்த்தன்-தன் தேரை ஊரும் தேவதேவன் சேறும் ஊர்- தாரை ஊரும் தண் தளிர் வேலி புடை சூழ நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த-நறையூரே (9) | |
|
| |
|
|
| 1496 | தாமத் துளப நீள் முடி மாயன்-தான் நின்ற நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல் காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை- சேமத் துணை ஆம் செப்பும்-அவர்க்கு திருமாலே (10) | |
|
| |
|
|