| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருவழுந்தூர்: 1 | 
					
			
			
      | | 1587 | தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள் இருட்கண் வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர்போலும்-
 முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர்
 அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1588 | பாரித்து எழுந்த படை மன்னர்-தம்மை மாள பாரதத்து தேரில் பாகன் ஆய் ஊர்ந்த தேவ-தேவன் ஊர்போலும்-
 நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகு இனங்கள்
 ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1589 | செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும் உம்பர் வாளிக்கு இலக்கு ஆக உதிர்த்த உரவோன் ஊர்போலும்-
 கொம்பில் ஆர்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டு இனங்கள்
 அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1590 | வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி அடியேன் மனம் புகுந்து என் உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர்போலும்-
 புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப் போன காதல் பெடையோடும்
 அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே            (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1591 | பகலும் இரவும் தானே ஆய் பாரும் விண்ணும் தானே ஆய் நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர்போலும்-
 துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய்
 அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே            (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1592 | ஏடு இலங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர்போலும்-
 நீடு மாடத் தனிச் சூலம் போழக் கொண்டல் துளி தூவ
 ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1593 | மாலைப் புகுந்து மலர்-அணைமேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர்போலும்-
 வேலைக் கடல்போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து
 ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1594 | வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என் நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற ஊர்போலும்-
 பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின்
 அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1595 | என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர்போலும்-
 மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட
 அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1596 | நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
 வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
 சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே 10
 | 
 |  | 
		
			|  |  |  |