| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருவழுந்தூர்: 2 | 
					
			
			
      | | 1597 | நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
 வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன்
 சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1598 | சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த சங்கம் இடத்தானை தழல் ஆழி வலத்தானை
 செங் கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
 அம் கமலக் கண்ணனை-அடியேன் கண்டுகொண்டேனே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1599 | கோ ஆனார் மடியக் கொலை ஆர் மழுக் கொண்டருளும் மூவா வானவனை முழு நீர் வண்ணனை அடியார்க்கு
 ஆஆ என்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற
 தேவாதிதேவனை-யான் கண்டுகொண்டு திளைத்தேனே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1600 | உடையானை ஒலி நீர் உலகங்கள் படைத்தானை விடையான் ஓட அன்று விறல் ஆழி விசைத்தானை
 அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர்
 உடையானை-அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1601 | குன்றால் மாரி தடுத்தவனை குல வேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை
 அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்
 நின்றானை-அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1602 | கஞ்சனைக் காய்ந்தானை கண்ணமங்கையுள் நின்றானை வஞ்சனப் பேய் முலையூடு உயிர் வாய் மடுத்து உண்டானை
 செஞ்சொல் நான்மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
 அஞ்சனக் குன்றம்-தன்னை-அடியேன் கண்டுகொண்டேனே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1603 | பெரியானை அமரர் தலைவற்கும் பிரமனுக்கும் உரி யானை உகந்தான்-அவனுக்கும் உணர்வதனுக்கு
 அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும்
 கரியானை-அடியேன் கண்டுகொண்டு களித்தேனே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1604 | திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா உரு ஆய் நின்றவனை ஒலி சேரும் மாருதத்தை
 அரு ஆய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற
 கரு ஆர் கற்பகத்தை-கண்டுகொண்டு களித்தேனே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1605 | நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில மகள்-தன் முலை ஆள் வித்தகனை முது நான்மறை வீதிதொறும்
 அலை ஆர் கடல்போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற
 கலை ஆர் சொற்பொருளை-கண்டுகொண்டு களித்தேனே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1606 | பேரானை குடந்தைப் பெருமானை இலங்கு ஒளி சேர் வார் ஆர் வனமுலையாள் மலர்-மங்கை நாயகனை
 ஆரா இன் அமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற
 கார் ஆர் கரு முகிலை-கண்டுகொண்டு களித்தேனே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  |