| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருக்கண்ணபுரம்: 2 | 
					
			
			
      | | 1657 | மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று
 கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானைக்
 கலியன் சொன்ன
 பா வளரும் தமிழ்-மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்
 ஐந்தும் வல்லார்
 பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவர் ஆய்ப்
 புகழ் தக்கோரே (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1658 | தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர் வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணர் ஓ
 துள்ளு நீர்க் கண்ணபுரம் தொழுதாள் இவள்
 கள்வியோ? கை வளை கொள்வது தக்கதே? (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1659 | நீள் நிலாமுற்றத்து நின்று இவள் நோக்கினாள் காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்
 பாணனார் திண்ணம் இருக்க இனி இவள்
 நாணுமோ? நன்று நன்று நறையூரர்க்கே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1660 | அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்- வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
 பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்
 உருகினாள் உள்மெலிந்தாள் இது என்கொலோ? (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1661 | உண்ணும் நாள் இல்லை உறக்கமும்-தான் இல்லை பெண்மையும் சால நிறைந்திலள் பேதை-தான்
 கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் கார்க் கடல்
 வண்ணர்மேல் எண்ணம் இவட்கு இது என்கொலோ? (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1662 | கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் காரிகை பெண்மை என்? தன்னுடை உண்மை உரைக்கின்றாள்
 வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால்
 வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1663 | வட வரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்
 மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள்
 கடவது என்-கண் துயில் இன்று இவர் கொள்ளவே? (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1664 | தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும் இரங்குமோ? எத்தனை நாள் இருந்து எள்கினாள்
 துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மை ஊர்
 அரங்கமே என்பது இவள்-தனக்கு ஆசையே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1665 | தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா கண்டு தான் கண்ணபுரம் தொழப் போயினாள்
 வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம்
 கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே?             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1666 | முள் எயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள் என் செய்கேன்
 கள் அவிழ் சோலைக் கணபுரம் கை தொழும்
 பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? (9)
 | 
 |  | 
		
			|  |  |  |