| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருக்கண்ணபுரம்: 4 | 
					
			
			
      | | 1678 | விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன் மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
 கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்
 வண்ண நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1679 | வேத முதல்வன் விளங்கு புரி நூலன் பாதம் பரவிப் பலரும் பணிந்து ஏத்தி
 காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம் பெருமான்
 தாது நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1680 | விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி? அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
 கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம் பெருமான்
 வண்டு நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1681 | நீர் மலிகின்றது ஓர் மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய் சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி
 கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம் பெருமான்
 தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1682 | ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி? பார் ஆர் உலகம் பரவ பெருங் கடலுள்
 கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம் பெருமான்
 தார் ஆர் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1683 | மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன் பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
 காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
 தாரில் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1684 | வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார் மன்னு தாசரதி ஆய தடமார்வன்
 காமன்-தன் தாதை கண்ணபுரத்து எம் பெருமான்
 தாம நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1685 | நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில் சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர்
 காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல்
 கோல நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1686 | நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன் அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான்
 கந்தம் கமழ் காயா வண்ணன் கதிர் முடிமேல்
 கொந்து நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ (9)
 | 
 |  | 
		
			|  |  |  |