இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருக்கண்ணபுரம்: 5 |
| 1687 | வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன் கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை கொண்டல் நிற வண்ணன் கண்ணபுரத்தானைத் தொண்டரோம் பாட நினைந்து ஊதாய்-கோல் தும்பீ (10) | |
|
| |
|
|
| 1688 | தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-தன் சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர் அவை சுட அதனோடும் மந்தமாருதம் வன முலை தடவந்து வலிசெய்வது ஒழியாதே (1) | |
|
| |
|
|
| 1689 | மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன் வரை புரை திருமார்வில் தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன் ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே (2) | |
|
| |
|
|
| 1690 | ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா பேயின் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ? தூய மா மதிக் கதிர் சுட துணை இல்லை இணை முலை வேகின்றதால் ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இலையே (3) | |
|
| |
|
|
| 1691 | கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர் தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலைமேல் இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை எனக்கு எனப் பெறலாமே (4) | |
|
| |
|
|
| 1692 | ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் தோழி நாம் இதற்கு என் செய்தும்? துணை இல்லை சுடர் படு முதுநீரில் ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர் அந்தி வந்து அடைகின்றதே (5) | |
|
| |
|
|
| 1693 | முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கு அழல் எரி அம்பின் வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்? எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங் கண் துயிலா கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே (6) | |
|
| |
|
|
| 1694 | கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை ஆகம் மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம் அடிகளும் வாரானால் இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும் விடை மணி அடும் ஆயன் விலங்கல் வேயினது ஓசையும் ஆய் இனி விளைவது ஒன்று அறியேனே (7) | |
|
| |
|
|
| 1695 | முழுது இவ் வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவு எய்த மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால் ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை அடங்க அம் சிறை கோலித் தழுவும் நள் இருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே (8) | |
|
| |
|
|
| 1696 | கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும் கனவினில் அவன் தந்த மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை சினம் செய் மால் விடைச் சிறு மணி ஓசை என் சிந்தையைச் சிந்துவிக்கும் அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன் ஆவியை அடுகின்றதே (9) | |
|
| |
|
|