இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருக்கண்ணபுரம்: 6 |
| 1697 | தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன் வண்டு ஆர் கூந்தல் மலர்-மங்கை வடிக் கண் மடந்தை மா நோக்கம் கண்டான் கண்டுகொண்டு உகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே. (1) | |
|
| |
|
|
| 1698 | பொருந்தா அரக்கர் வெம் சமத்துப் பொன்ற அன்று புள் ஊர்ந்து பெருந் தோள் மாலி தலை புரள பேர்ந்த அரக்கர் தென் இலங்கை இருந்தார்-தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்துப் புக்கு ஒளிப்ப கருந் தாள் சிலை கைக்கொண்டான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே 2 | |
|
| |
|
|
| 1699 | வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார்-கோவை அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் வல் ஆள் அரக்கர் குலப்பாவை வாட முனி-தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (3) | |
|
| |
|
|
| 1700 | மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து கொல்லை விலங்கு பணிசெய்ய கொடியோன் இலங்கை புகல் உற்று தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (4) | |
|
| |
|
|
| 1701 | ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம் ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமன் பயந்தான் கருதும் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (5) | |
|
| |
|
|
| 1702 | வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன் திருந்தா அரக்கர் தென் இலங்கை செந் தீ உண்ண சிவந்து ஒருநாள் பெருந் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் கருந் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (6) | |
|
| |
|
|
| 1703 | இலை ஆர் மலர்ப் பூம் பொய்கைவாய் முதலை-தன்னால் அடர்ப்புண்டு கொலை ஆர் வேழம் நடுக்கு உற்றுக் குலைய அதனுக்கு அருள்புரிந்தான் அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் கலை மாச் சிலையால் எய்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (7) | |
|
| |
|
|
| 1704 | மால் ஆய் மனமே அருந் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் கத மா கழுதையும் மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து காலால் சகடம் பாய்ந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (8) | |
|
| |
|
|
| 1705 | குன்றால் மாரி பழுது ஆக்கி கொடி ஏர் இடையாள் பொருட்டாக வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன் சென்றான் தூது பஞ்சவர்க்கு ஆய் திரி கால் சகடம் சினம் அழித்து கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (9) | |
|
| |
|
|
| 1706 | கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ணபுரத்து எம் அடிகளை திரு மா மகளால் அருள்மாரி செழுநீர் ஆலி வள நாடன் மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் இரு மா நிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே (10) | |
|
| |
|
|