| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருக்கண்ணபுரம்: 9 | 
					
			
			
      | | 1727 | கைம் மான மத யானை இடர் தீர்த்த கரு முகிலை மைம் மான மணியை அணி கொள் மரகதத்தை
 எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள்
 அம்மானை-அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1728 | தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார் வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின்
 திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த
 பெருமானை-அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1729 | விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உறப் படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி
 மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று
 உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ?            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1730 | மிக்கானை மறை ஆய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை
 தக்கானை கடிகைத் தடங் குன்றின்மிசை இருந்த
 அக்காரக் கனியை-அடைந்து உய்ந்துபோனேனே            (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1731 | வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ?-
 கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்து உகந்த
 மைந்தா உன்னை என்றும் மறவாமை பெற்றேனே            (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1732 | எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை-
 நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்திகண்டாய்-
 மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1733 | பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றான் ஆய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை
 முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை-
 எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1734 | கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெருங் கடலே பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
 வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானைப்
 பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1735 | கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடி கமழும் தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல்திசையுள்
 விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெம் சுடரை-
 கண் ஆரக் கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்றுகொலோ? (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1736 | செரு நீர வேல் வலவன் கலிகன்றி மங்கையர்-கோன் கரு நீர் முகில் வண்ணன் கண்ணபுரத்தானை
 இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர்
 வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடுமினே            (10)
 | 
 |  | 
		
			|  |  |  |