| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| திருக்குறுங்குடி: 1 | 
					
			
			
      | | 1787 | தவள இளம் பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி
 துவள என் நெஞ்சகம் சோர ஈரும்
 சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன்
 இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்
 என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
 குவளை மலர் நிற வண்ணர் மன்னு
 குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1788 | தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இள வாடை இன்னே
 ஊதை திரிதந்து உழறி உண்ண
 ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
 பேதையர் பேதைமையால் இருந்து
 பேசிலும் பேசுக பெய்வளையார்
 கோதை நறு மலர் மங்கை மார்வன்
 குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1789 | காலையும் மாலை ஒத்துண்டு கங்குல் நாழிகை ஊழியில் நீண்டு உலாவும்
 போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும்
 பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில்
 மாலவன் மா மணி வண்ணன் மாயம்
 மற்றும் உள அவை வந்திடாமுன்
 கோல மயில் பயிலும் புறவின்
 குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1790 | கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும்
 ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள
 ஓர் இரவும் உறங்காதிருப்பேன்-
 பெரு மணி வானவர் உச்சி வைத்த
 பேர் அருளாளன் பெருமை பேசி
 குரு மணி நீர் கொழிக்கும் புறவின்
 குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1791 | திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன் தீம் குழல் ஒசையும் தென்றலோடு
 கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற
 கோல இளம்பிறையோடு கூடி
 பண்டைய அல்ல இவை நமக்கு
 பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
 கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு
 குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1792 | எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக ஏந்திழையார்
 நல்லர் அவர் திறம் நாம் அறியோம்
 நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
 வல்லன சொல்லி மகிழ்வரேலும்
 மா மணி வண்ணரை நாம் மறவோம்
 கொல்லை வளர் இள முல்லை புல்கு
 குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1793 | செங் கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என்
 அங்கம் மெலிய வளை கழல
 ஆதுகொலோ? என்று சொன்ன பின்னை
 ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு
 ஆடும்-அதனை அறியமாட்டேன்
 கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின்
 குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1794 | கேவலம் அன்று கடலின் ஓசை கேள்மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என்
 ஆவி அளவும் அணைந்து நிற்கும்
 அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு
 ஏ வலம் காட்டி இவன் ஒருவன்
 இப்படியே புகுந்து எய்திடாமுன்
 கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து
 குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1795 | சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்றுதாறும்
 போர்ப்பது ஓர் பொன்-படம் தந்து போனான்
 போயின ஊர் அறியேன் என் கொங்கை
 மூத்திடுகின்றன மற்று அவன்-தன்
 மொய் அகலம் அணையாது வாளா
 கூத்தன் இமையவர்-கோன் விரும்பும்
 குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1796 | செற்றவன் தென் இலங்கை மலங்க தேவர் பிரான் திரு மா மகளைப்
 பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட
 பேர்-அருளாளன் பெருமை பேசக்
 கற்றவன் காமரு சீர்க் கலியன்
 கண் அகத்தும் மனத்தும் அகலாக்
 கொற்றவன் முற்று உலகு ஆளி நின்ற
 குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்            (10)
 | 
 |  | 
		
			|  |  |  |