இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| திருவல்லவாழ் |
| 1807 | தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல் அந்தம் ஆய் ஆதி ஆய் ஆதிக்கும் ஆதி ஆய் ஆயன் ஆய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 1 | |
|
| |
|
|
| 1808 | மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும் அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 2 | |
|
| |
|
|
| 1809 | பூண் உலாம் மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய் இது என்று பேணுவார் பேசும் அப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல் நீள் நிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண் இரந்த மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 3 | |
|
| |
|
|
| 1810 | பண் உலாம் மென் மொழிப் பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று எண்ணுவார் எண்ணம்-அது ஒழித்து நீ பிழைத்து உயக் கருதினாயேல் விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளங்கொள் முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 4 | |
|
| |
|
|
| 1811 | மஞ்சு தோய் வெண் குடை மன்னர் ஆய் வாரணம் சூழ வாழ்ந்தார் துஞ்சினார் என்பது ஓர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல் நஞ்சு தோய் கொங்கைமேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 5 | |
|
| |
|
|
| 1812 | உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு அருவி நோய் செய்து நின்று ஐவர்-தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல் திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும் மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 6 | |
|
| |
|
|
| 1813 | நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை மெய் எனக் கொண்டு வாளா பேயர்-தாம் பேசும் அப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல் தீ உலாம் வெம் கதிர் திங்கள் ஆய் மங்குல் வான் ஆகி நின்ற மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 7 | |
|
| |
|
|
| 1814 | மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உயக் கருதினாயேல் சந்து சேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும் வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 8 | |
|
| |
|
|
| 1815 | வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற கள்ளநூல்-தன்னையும் கருமம் அன்று என்று உயக் கருதினாயேல் தெள்ளியார் கைதொழும் தேவனார் மா முநீர் அமுது தந்த வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 9 | |
|
| |
|
|
| 1816 | மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள்-தம்மைச் சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன் கறை உலாம் வேல்வல கலியன் வாய் ஒலி இவை கற்று வல்லார் இறைவர் ஆய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே 10 | |
|
| |
|
|