இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல் |
| 1877 | சந்த மலர்க் குழல் தாழ தான் உகந்து ஓடி தனியே வந்து என் முலைத்தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே (1) | |
|
| |
|
|
| 1878 | வங்க மறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கும் நம்பீ செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா கொங்கை சுரந்திட உன்னைக் கூவியும் காணாதிருந்தேன் எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே? (2) | |
|
| |
|
|
| 1879 | திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் (3) | |
|
| |
|
|
| 1880 | மக்கள் பெறு தவம் போலும்-வையத்து வாழும் மடவார் மக்கள் பிறர் கண்ணுக்கு-ஒக்கும் முதல்வா மதக் களிறு அன்னாய் செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன் ஒக்கலைமேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் (4) | |
|
| |
|
|
| 1881 | மைத்த கருங் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய் வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா இத்தனை போது அன்றி என்-தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் (5) | |
|
| |
|
|
| 1882 | பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை கள்ளம் மனத்தில் உடையை காணவே தீமைகள் செய்தி உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற பள்ளிக் குறிப்புச் செய்யாதே பால் அமுது உண்ண நீ வாராய் (6) | |
|
| |
|
|
| 1883 | தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ணக் கொடுக்க வன் மகன் ஆய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ நன் மகள் ஆய்மகளோடு நானில-மங்கை மணாளா என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே (7) | |
|
| |
|
|
| 1884 | உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள்-தம் ஆ-நிரை எல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய் (8) | |
|
| |
|
|
| 1885 | பெற்றத் தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் சுற்றக் குழாத்து இளங் கோவே தோன்றிய தொல் புகழாளா கற்று இனம் தோறும் மறித்து கானம் திரிந்த களிறே எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே (9) | |
|
| |
|
|
| 1886 | இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல்கொண்டு செங்கண் நெடியவன்-தன்னை அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும் மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே (10) | |
|
| |
|
|