| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| சப்பாணி கொட்ட வேண்டுதல் | 
					
			
			
      | | 1887 | பூங் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்க புடையுண்டு
 ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும்
 ஓங்கு ஓத வண்ணனே சப்பாணி
 ஒளி மணி வண்ணனே சப்பாணி (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1888 | தாயர் மனங்கள் தடிப்ப தயிர் நெய் உண்டு ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம்
 ஆயர் அழக அடிகள் அரவிந்த
 வாயவனே கொட்டாய் சப்பாணி
 மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி 2
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1889 | தாம் மோர் உருட்டி தயிர் நெய் விழுங்கிட்டு தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
 தாம் மோதரக் கையால் ஆர்க்க தழும்பு இருந்த
 தாமோதரா கொட்டாய் சப்பாணி
 தாமரைக் கண்ணனே சப்பாணி            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1890 | பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து உற்றார் ஒருவரும் இன்றி உலகினில்
 மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சு உண்ட
 கற்றாயனே கொட்டாய் சப்பாணி
 கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி            (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1891 | சோத்து என நின்னைத் தொழுவன் வரம் தர பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் பெரியன
 ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
 சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி
 தடங் கைகளால் கொட்டாய் சப்பாணி            (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1892 | கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு நான் அவல் அப்பம் தருவன் கருவிளைப்
 பூ அலர் நீள் முடி நந்தன்-தன் போர் ஏறே
 கோவலனே கொட்டாய் சப்பாணி
 குடம் ஆடீ கொட்டாய் சப்பாணி            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1893 | புள்ளினை வாய் பிளந்து பூங் குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி தூங்கு உறி வெண்ணெயை
 அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
 பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி
 பேய் முலை உண்டானே சப்பாணி (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1894 | யாயும் பிறரும் அறியாத யாமத்து மாய வலவைப் பெண் வந்து முலை தர
 பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
 வாயவனே கொட்டாய் சப்பாணி
 மால்வண்ணனே கொட்டாய் சப்பாணி            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1895 | கள்ளக் குழவி ஆய் காலால் சகடத்தைத் தள்ளி உதைத்திட்டு தாய் ஆய் வருவாளை
 மெள்ளத் தொடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட
 வள்ளலே கொட்டாய் சப்பாணி
 மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 1896 | கார் ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கையர்-கோன் பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட
 சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
 தார் ஆளா கொட்டாய் சப்பாணி
 தட மார்வா கொட்டாய் சப்பாணி            (10)
 | 
 |  | 
		
			|  |  |  |