இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல் |
| 1897 | எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே? -நர நாரணன் ஆய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக பொன் மிடறு அத்தனைபோது அங்காந்தவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (1) | |
|
| |
|
|
| 1898 | குன்று ஒன்று மத்தா அரவம் அளவி குரை மா கடலைக் கடைந்திட்டு ஒருகால் நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் அது அன்றியும் முன் நன்று உண்ட தொல் சீர் மகரக் கடல் ஏழ் மலை ஏழ் உலகு ஏழ் ஒழியாமை நம்பி அன்று உண்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (2) | |
|
| |
|
|
| 1899 | உளைந்திட்டு எழுந்த மது-கைடவர்கள் உலப்பு இல் வலியார்-அவர்பால் வயிரம் விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் அளைந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (3) | |
|
| |
|
|
| 1900 | தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான் சரண் ஆய் முரண் ஆயவனை உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய் அளந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (4) | |
|
| |
|
|
| 1901 | நீண்டான் குறள் ஆய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம் தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் வேண்டாமை நமன்-தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகு ஏழ் ஆண்டான்-அவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (5) | |
|
| |
|
|
| 1902 | பழித்திட்ட இன்பப் பயன் பற்று அறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் ஒழித்திட்டு அவரைத் தனக்கு ஆக்கவல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள்-அவை ஆயிரமும் மழுவால் அழித்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (6) | |
|
| |
|
|
| 1903 | படைத்திட்டு அது இவ் வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் துடைத்திட்டு அவரைத் தனக்கு ஆக்க என்னத் தெளியா அரக்கர் திறல் போய் அவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை அடைத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (7) | |
|
| |
|
|
| 1904 | நெறித்திட்ட மென் கூழை நல் நேர்-இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளங் கொற்றவன் ஆய் துளங்காத முந்நீர் செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீள் முடி தோளொடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (8) | |
|
| |
|
|
| 1905 | சுரிந்திட்ட செங் கேழ் உளைப் பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலைபோல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (9) | |
|
| |
|
|
| 1906 | நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறிப் பால் தயிர் நெய் அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல் நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன் கலியன் ஒலிசெய்த தமிழ்-மாலை வல்லார் என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே (10) | |
|
| |
|
|