இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
|
| தலைவி இரங்கிக் கூறல் |
| 1971 | மன் இலங்கு பாரதத்துத் தேர் ஊர்ந்து மாவலியைப் பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ் தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு-இது காணீர்- என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே 1 | |
|
| |
|
|
| 1972 | இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர் பருந் தாள் களிற்றுக்கு அருள் செய்த செங் கண் பெருந் தோள் நெடுமாலைப் பேர் பாடி ஆட வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே 2 | |
|
| |
|
|
| 1973 | அன்னே இவரை அறிவன் மறை நான்கும் முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து என்னே-இவர் எண்ணும் எண்ணம்? அறியோமே 3 | |
|
| |
|
|
| 1974 | அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு- வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி சிறியான் ஓர் பிள்ளை ஆய் மெள்ள நடந்திட்டு உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தார்-தம்மையே? 4 | |
|
| |
|
|
| 1975 | தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வர் ஆதலால் தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே 5 | |
|
| |
|
|
| 1976 | வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உய்த்தார்-ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து ஓர் அடிக்கும் எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே 6 | |
|
| |
|
|
| 1977 | கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள் என்னோ கழன்ற? இவை என்ன மாயங்கள்? பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே? 7 | |
|
| |
|
|
| 1978 | பாடோமே-எந்தை பெருமானை? பாடிநின்று ஆடோமே-ஆயிரம் பேரானை? பேர் நினைந்து சூடோமே-சூடும் துழாய் அலங்கல்? சூடி நாம் கூடோமே-கூடக் குறிப்பு ஆகில்? நல் நெஞ்சே 8 | |
|
| |
|
|
| 1979 | நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும் அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடிமேல் போது அணியப்பெற்றோமே 9 | |
|
| |
|
|
| 1980 | பெற்று ஆரார்-ஆயிரம் பேரானைப் பேர் பாட பெற்றான் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை கற்றார் ஓ முற்று உலகு ஆள்வர் இவை கேட்கல் உற்றார்க்கு உறு துயர் இல்லை உலகத்தே 10 | |
|
| |
|
|