| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி உலகிற்கு உபதேசித்தல் | 
					
			
			
      | | 2001 | மைந் நின்ற கருங் கடல்வாய் உலகு இன்றி வானவரும் யாமும் எல்லாம்
 நெய்ந் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்
 நெடுங் காலம் கிடந்தது ஓரீர்
 எந் நன்றி செய்தாரா ஏதிலோர்
 தெய்வத்தை ஏத்துகின்றீர்?
 செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள்
 அண்டனைய ஏத்தீர்களே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2002 | நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது ஓடி நிமிர்ந்த காலம்
 மல் ஆண்ட தடக் கையால் பகிரண்டம்
 அகப்படுத்த காலத்து அன்று
 எல்லாரும் அறியாரோ? எம் பெருமான்
 உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்
 அல்லாதார் தாம் உளரே? அவன் அருளே
 உலகு ஆவது அறியீர்களே?             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2003 | நெற்றிமேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால் வாய்
 ஒற்றைக் கை வெண் பகட்டின் ஒருவனையும்
 உள்ளிட்ட அமரரோடும்
 வெற்றிப் போர்க் கடல் அரையன் விழுங்காமல்
 தான் விழுங்கி உய்யக்கொண்ட
 கொற்றப்போர் ஆழியான் குணம் பரவாச்
 சிறுதொண்டர் கொடிய ஆறே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2004 | பனிப் பரவைத் திரை ததும்ப பார் எல்லாம் நெடுங் கடலே ஆன காலம்
 இனிக் களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம்
 ஏழினையும் ஊழில் வாங்கி
 முனித் தலைவன் முழங்கு ஒளி சேர் திரு வயிற்றில்
 வைத்து உம்மை உய்யக்கொண்ட
 கனிக் களவத் திரு உருவத்து ஒருவனையே
 கழல் தொழுமா கல்லீர்களே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2005 | பார் ஆரும் காணாமே பரவை மா நெடுங் கடலே ஆன காலம்
 ஆரானும் அவனுடைய திரு வயிற்றில்
 நெடுங்காலம் கிடந்தது உள்ளத்து
 ஓராத உணர்விலீர் உணருதிரேல்
 உலகு அளந்த உம்பர் கோமான்
 பேராளன் பேரான பேர்கள்
 ஆயிரங்களுமே பேசீர்களே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2006 | பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின்-மீது ஓடிப் பெருகு காலம்
 தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன்
 வயிற்று இருத்தி உய்யக்கொண்டான்
 போய் இருக்க மற்று இங்கு ஓர் புதுத் தெய்வம்
 கொண்டாடும் தொண்டீர் பெற்ற
 தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ-
 மாட்டாத தகவு அற்றீரே?
 6
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2007 | மண் நாடும் விண் நாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
 உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல்
 தான் விழுங்கி உய்யக்கொண்ட
 கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
 கழல் சூடி அவனை உள்ளத்து
 எண்ணாத மானிடத்தை எண்ணாத
 போது எல்லாம் இனிய ஆறே 7
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2008 | மறம் கிளர்ந்த கருங் கடல் நீர் உரம் துரந்து பரந்து ஏறி அண்டத்து அப்பால்
 புறம் கிளர்ந்த காலத்து பொன் உலகம்
 ஏழினையும் ஊழில் வாங்கி
 அறம் கிளந்த திரு வயிற்றின் அகம்படியில்
 வைத்து உம்மை உய்யக்கொண்ட
 நிறம் கிளர்ந்த கருஞ் சோதி நெடுந்தகையை
 நினையாதார் நீசர்-தாமே 8
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2009 | அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆஆ என்று
 தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும்
 தான் அருளி உலகம் ஏழும்
 உண்டு ஒத்த திருவயிற்றின் அகம்படியில்
 வைத்து உம்மை உய்யக்கொண்ட
 கொண்டல் கை மணி வண்ணன் தண்
 குடந்தை நகர் பாடி ஆடீர்களே 9
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2010 | தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
 யாவரையும் ஒழியாமே எம் பெருமான்
 உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
 கா வளரும் பொழில் மங்கைக் கலிகன்றி
 ஒலி மாலை கற்று வல்லார்
 பூ வளரும் திருமகளால் அருள்பெற்றுப்
 பொன்-உலகில் பொலிவர்-தாமே 10
 | 
 |  | 
		
			|  |  |  |