| இரண்டாம் ஆயிரம் திருமங்கை ஆழ்வார்
 பெரிய திருமொழி
 
 | 
		| பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் | 
					
			
			
      | | 2021 | மாற்றம் உள ஆகிலும் சொல்லுவன் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று இன்னம்-
 ஆற்றங்கரை வாழ் மரம்போல்-அஞ்சுகின்றேன்
 நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ                 (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2022 | சீற்றம் உள ஆகிலும் செப்புவன் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று அஞ்சி-
 காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல்-
 ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2023 | தூங்கு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சி-
 பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால்போல்-
 தாங்காது உள்ளம் தள்ளும் என் தமரைக்கண்ணா             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2024 | உரு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி-
 இரு பாடு எரி கொள்ளியினுள்-எறும்பேபோல்-
 உருகாநிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2025 | கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில் தள்ளிப் புகப் பெய்திகொல் என்று அதற்கு அஞ்சி-
 வெள்ளத்திடைப்பட்ட நரி இனம்போலே-
 உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2026 | படை நின்ற பைந்தாமரையோடு அணி நீலம் மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா
 இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே-
 அடைய அருளாய் எனக்கு உன்-தன் அருளே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2027 | வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது-அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன்
 தேம்பல் இளந் திங்கள் சிறைவிடுத்து ஐவாய்ப்
 பாம்பின் அணைப் பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2028 | அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!- துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
 மணியே மணி மாணிக்கமே மதுசூதா!-
 பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2029 | நந்தா நரகத்து அழுந்தாவகை நாளும்- எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள் செய்வாய்
 சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா!-
 அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2030 | குன்றம் எடுத்து ஆ-நிரை காத்தவன்-தன்னை மன்றில் புகழ் மங்கை மன் கலிகன்றி சொல்
 ஒன்று நின்ற ஒன்பதும் வல்லவர்-தம்மேல்
 என்றும் வினை ஆயின சாரகில்லாவே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  |