நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| ஆத்ம உபதேசம் |
| 2782 | உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே (1) | |
|
| |
|
|
| 2783 | மனன் அகம் மலம் அற மலர்மிசை எழுதரும் மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே (2) | |
|
| |
|
|
| 2784 | இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந் நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே (3) | |
|
| |
|
|
| 2785 | நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள் தாம் அவர் இவர் உவர் அது இது உது எது வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே (4) | |
|
| |
|
|
| 2786 | அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர் அவரவர் விதிவழி அடைய நின்றனரே (5) | |
|
| |
|
|
| 2787 | நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே (6) | |
|
| |
|
|
| 2788 | திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசைப் படர் பொருள் முழுவதும் ஆய் அவைஅவைதொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே (7) | |
|
| |
|
|
| 2789 | சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன் புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே (8) | |
|
| |
|
|
| 2790 | உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள் உளன் என இலன் என இவை குணம் உடைமையில் உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே (9) | |
|
| |
|
|
| 2791 | பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக் கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும் கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே (10) | |
|
| |
|
|
| 2792 | கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை வரன் நவில் திறல் வலி அளி பொறை ஆய்நின்ற பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே (11) | |
|
| |
|
|