நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| ஆராதனைக்கு எளியவன் |
| 2837 | பரிவது இல் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர் பிரிவகை இன்றி நல் நீர் தூய் புரிவதுவும் புகை பூவே (1) | |
|
| |
|
|
| 2838 | மதுவார் தண் அம் துழாயான் முது வேத முதலவனுக்கு எது ஏது என் பணி என்னாது அதுவே ஆள் செய்யும் ஈடே (2) | |
|
| |
|
|
| 2839 | ஈடும் எடுப்பும் இல் ஈசன் மாடு விடாது என் மனனே பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே (3) | |
|
| |
|
|
| 2840 | அணங்கு என ஆடும் என் அங்கம் வணங்கி வழிபடும் ஈசன் பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினானே (4) | |
|
| |
|
|
| 2841 | கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் விள்கை விள்ளாமை விரும்பி உள் கலந்தார்க்கு ஓர் அமுதே (5) | |
|
| |
|
|
| 2842 | அமுதம் அமரர்கட்கு ஈந்த நிமிர் சுடர் ஆழி நெடுமால் அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே (6) | |
|
| |
|
|
| 2843 | நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணிசெய்தான் தாள்கள் தலையில் வணங்கி நாள்கள் தலைக்கழிமின்னே (7) | |
|
| |
|
|
| 2844 | கழிமின் தொண்டீர்கள் கழித்துத் தொழுமின் அவனை தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே (8) | |
|
| |
|
|
| 2845 | தரும அரும் பயன் ஆய திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரானார் இருமை வினை கடிவாரே (9) | |
|
| |
|
|
| 2846 | கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக்கண் கொடியா அடு புள் உயர்த்த வடிவு ஆர் மாதவனாரே (10) | |
|
| |
|
|
| 2847 | மாதவன்பால் சடகோபன் தீது அவம் இன்றி உரைத்த ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து ஓத வல்லார் பிறவாரே (11) | |
|
| |
|
|