| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை | 
					
			
			
      | | 2870 | இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
 எவையும் எவரும் தன்னுளே
 ஆகியும் ஆக்கியும் காக்கும்
 அவையுள் தனிமுதல் எம்மான்
 கண்ண பிரான் என் அமுதம்
 சுவையன் திருவின் மணாளன்
 என்னுடைச் சூழல் உளானே   (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2871 | சூழல் பலபல வல்லான் தொல்லை அம் காலத்து உலகைக்
 கேழல் ஒன்று ஆகி இடந்த
 கேசவன் என்னுடை அம்மான்
 வேழ மருப்பை ஒசித்தான்
 விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
 ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்
 அவன் என் அருகவிலானே   (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2872 | அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
 கருகிய நீல நன் மேனி
 வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
 பொரு சிறைப் புள் உவந்து ஏறும்
 பூமகளார் தனிக் கேள்வன்
 ஒருகதியின் சுவை தந்திட்டு
 ஒழிவு இலன் என்னோடு உடனே   (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2873 | உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்
 மட மகள் என்று இவர் மூவர்
 ஆளும் உலகமும் மூன்றே
 உடன் அவை ஒக்க விழுங்கி
 ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்
 கடல் மலி மாயப் பெருமான்
 கண்ணன் என் ஒக்கலையானே   (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2874 | ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று தந்திட வாங்கிச்
 செக்கம் செக அன்று அவள்பால்
 உயிர் செக உண்ட பெருமான்
 நக்க பிரானோடு அயனும்
 இந்திரனும் முதலாக
 ஒக்கவும் தோற்றிய ஈசன்
 மாயன் என் நெஞ்சின் உளானே   (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2875 | மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே
 காயமும் சீவனும் தானே
 காலும் எரியும் அவனே
 சேயன் அணியன் எவர்க்கும்
 சிந்தைக்கும் கோசரம் அல்லன்
 தூயன் துயக்கன் மயக்கன்
 என்னுடைத் தோளிணையானே     (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2876 | தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
 தாள் இணை மேலும் புனைந்த
 தண் அம் துழாய் உடை அம்மான்
 கேள் இணை ஒன்றும் இலாதான்
 கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
 நாள் அணைந்து ஒன்றும் அகலான்
 என்னுடை நாவின் உளானே   (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2877 | நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
 ஆவியும் ஆக்கையும் தானே
 அழிப்போடு அளிப்பவன் தானே
 பூ இயல் நால் தடம் தோளன்
 பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
 காவி நன் மேனிக் கமலக்
 கண்ணன் என் கண்ணின் உளானே   (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2878 | கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
 அமலங்கள் ஆக விழிக்கும்
 ஐம்புலனும் அவன் மூர்த்தி
 கமலத்து அயன் நம்பி தன்னைக்
 கண்ணுதலானொடும் தோற்றி
 அமலத் தெய்வத்தொடு உலகம்
 ஆக்கி என் நெற்றி உளானே   (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2879 | நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்
 கற்றைத் துழாய் முடிக் கோலக்
 கண்ண பிரானைத் தொழுவார்
 ஒற்றைப் பிறை அணிந்தானும்
 நான்முகனும் இந்திரனும்
 மற்றை அமரரும் எல்லாம்
 வந்து எனது உச்சியுளானே   (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 2880 | உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்குக் கண்ண பிரானுக்கு
 இச்சையுள் செல்ல உணர்த்தி
 வண் குருகூர்ச் சடகோபன்
 இச் சொன்ன ஆயிரத்துள்ளே
 இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
 நிச்சலும் விண்ணப்பம் செய்ய
 நீள் கழல் சென்னி பொருமே   (11)
 | 
 |  | 
		
			|  |  |  |