நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம் |
| 2881 | பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு திரு மா நீள் கழல் ஏழ் உலகும் தொழ ஒரு மாணிக் குறள் ஆகி நிமிர்ந்த அக் கரு மாணிக்கம் என் கண்ணுளது ஆகுமே (1) | |
|
| |
|
|
| 2882 | கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம் மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய் விரியும் எம் பிரானையே? (2) | |
|
| |
|
|
| 2883 | எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை தண் தாமரைக் கண்ணனை கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே (3) | |
|
| |
|
|
| 2884 | நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால் என் செய்யோம்? இனி என்ன குறைவினம்? மைந்தனை மலராள் மணவாளனைத் துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய் (4) | |
|
| |
|
|
| 2885 | கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி கொண்டானைக் கண்டுகொண்டனை நீயுமே (5) | |
|
| |
|
|
| 2886 | நீயும் நானும் இந் நேர்நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன் தாயும் தந்தையும் ஆய் இவ் உலகினில் வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே (6) | |
|
| |
|
|
| 2887 | எந்தையே என்றும் எம் பெருமான் என்றும் சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் எந்தை எம் பெருமான் என்று வானவர் சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே (7) | |
|
| |
|
|
| 2888 | செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன் மாயமே அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே (8) | |
|
| |
|
|
| 2889 | நம்பியை தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும் திரு மூர்த்தியை உம்பர் வானவர் ஆதி அம் சோதியை எம் பிரானை என் சொல்லி மறப்பனோ? (9) | |
|
| |
|
|
| 2890 | மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன் மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணொடு மறப்பு அற என் உள்ளே மன்னினான் தன்னை மறப்பனோ இனி யான் என் மணியையே? (10) | |
|
| |
|
|
| 2891 | மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர் அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன் தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே (11) | |
|
| |
|
|