நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல் |
3158 | வீற்றிருந்து ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான் தன்னை போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே? (1) | |
|
|
|
|
3159 | மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் செய்ய கோலத் தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை மொய்ய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன் வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே (2) | |
|
|
|
|
3160 | வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன் வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே (3) | |
|
|
|
|
3161 | மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான் தன்னை நா இயலால் இசைமாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன் ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே (4) | |
|
|
|
|
3162 | ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம் ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன் காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே (5) | |
|
|
|
|
3163 | கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே (6) | |
|
|
|
|
3164 | என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான் தன்னை குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை சொல் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே? (7) | |
|
|
|
|
3165 | நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானை சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே? (8) | |
|
|
|
|
3166 | வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த் தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை கூனல் சங்கத் தடக்கையவனை குடம் ஆடியை வானக் கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டே? (9) | |
|
|
|
|
3167 | உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும் கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே (10) | |
|
|
|
|
3168 | மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க் காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப் பத்தால் வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே 11 | |
|
|
|
|