| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல் | 
					
			
			
      | | 3202 | நண்ணாதார் முறுவலிப்ப நல் உற்றார் கரைந்து ஏங்க எண் ஆராத் துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை
 கண்ணாளா கடல் கடைந்தாய் உன கழற்கே வரும் பரிசு
 தண்ணாவாது அடியேனைப் பணி கண்டாய் சாமாறே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3203 | சாம் ஆறும் கெடும் ஆறும் தமர் உற்றார் தலைத்தலைப்பெய்து ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை
 ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு அணையாய் அம்மானே
 கூமாறே விரைகண்டாய் அடியேனை குறிக்கொண்டே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3204 | கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும் வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல்
 கண்டு ஆற்றேன் உலகு இயற்கை! கடல்வண்ணா அடியேனைப்
 பண்டேபோல் கருதாது உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3205 | கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை
 வள்ளலே மணிவண்ணா உன கழற்கே வரும்பரிசு
 வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3206 | வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும் ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப் பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்
 ஈங்கு இதன்மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை
 வாங்கு எனை நீ மணிவண்ணா அடியேனை மறுக்கேலே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3207 | மறுக்கி வல் வலைப்படுத்தி குமைத்திட்டு கொன்று உண்பர் அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை
 வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை
 அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3208 | ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும் நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
 நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய
 கூயேகொள் அடியேனை கொடு உலகம் காட்டேலே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3209 | காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால் ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
 கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்துக்
 கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3210 | கூட்டுதி நின் குரை கழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து ஆட்டுதி நீ அரவு அணையாய் அடியேனும் அஃது அறிவன்
 வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழலக்
 கூட்டு அரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3211 | கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்
 ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப
 கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3212 | திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை திருவடி சேர்வது கருதி செழுங் குருகூர்ச் சடகோபன்
 திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப் பத்தும்
 திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |