| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல் | 
					
			
			
      | | 3246 | மாசு அறு சோதி என் செய்ய வாய் மணிக்குன்றத்தை ஆசு அறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
 பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம்?
 ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே?             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3247 | என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை? என் செய்ய தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
 முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி
 என் செய்ய வாயும் கருங் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3248 | ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய்முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
 பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்
 தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே?             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3249 | ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
 பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த
 கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3250 | கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும்
 கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே
 துடி கொள் இடை மடத் தோழீ அன்னை என் செய்யுமே?             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3251 | அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
 முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
 மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3252 | வலையுள் அகப்படுத்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை
 கலை கொள் அகல் அல்குல் தோழீ நம் கண்களால் கண்டு
 தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே?             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3253 | பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருது இடை போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட
 தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந் நாள்கொலோ
 யாம் உறுகின்றது தோழீ அன்னையர் நாணவே?             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3254 | நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு சேண் உயர் வானத்து இருக்கும் தேவ பிரான் தன்னை
 ஆணை என் தோழீ உலகுதோறு அலர் தூற்றி ஆம்
 கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3255 | யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரான் உடை தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
 ஆம் மடம் இன்றி தெருவுதோறு அயல் தையலார்
 நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3256 | இரைக்கும் கருங் கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
 நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
 உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |