| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி) | 
					
			
			
      | | 3268 | எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்?
 நங்கள் கோலத் திருக்குறுங்குடி
 நம்பியை நான் கண்டபின்
 சங்கினோடும் நேமியோடும்
 தாமரைக் கண்களோடும்
 செங்கனி வாய் ஒன்றினோடும்
 செல்கின்றது என் நெஞ்சமே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3269 | என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
 தென் நன் சோலைத் திருக்குறுங்குடி
 நம்பியை நான் கண்டபின்
 மின்னு நூலும் குண்டலமும்
 மார்பில் திருமறுவும்
 மன்னு பூணும் நான்கு தோளும்
 வந்து எங்கும் நின்றிடுமே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3270 | நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
 குன்ற மாடத் திருக்குறுங்குடி
 நம்பியை நான் கண்டபின்
 வென்றி வில்லும் தண்டும் வாளும்
 சக்கரமும் சங்கமும்
 நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா
 நெஞ்சுள்ளும் நீங்காவே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3271 | நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
 தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி
 நம்பியை நான் கண்டபின்
 பூந் தண் மாலைத் தண் துழாயும்
 பொன் முடியும் வடிவும்
 பாங்கு தோன்றும் பட்டும் நாணும்
 பாவியேன் பக்கத்தவே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3272 | பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
 தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி
 நம்பியை நான் கண்டபின்
 தொக்க சோதித் தொண்டை வாயும்
 நீண்ட புருவங்களும்
 தக்க தாமரைக் கண்ணும் பாவியேன்
 ஆவியின் மேலனவே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3273 | மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள்
 சோலை சூழ் தண் திருக்குறுங்குடி
 நம்பியை நான் கண்டபின்
 கோல நீள் கொடி மூக்கும் தாமரைக்
 கண்ணும் கனி வாயும்
 நீல மேனியும் நான்கு தோளும்
 என் நெஞ்சம் நிறைந்தனவே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3274 | நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள்
 சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி
 நம்பியை நான் கண்டபின்
 நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த
 நீண்ட பொன் மேனியொடும்
 நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்
 நேமி அங்கை உளதே            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3275 | கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
 மை கொள் மாடத் திருக்குறுங்குடி
 நம்பியை நான் கண்டபின்
 செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும்
 சிற்றிடையும் வடிவும்
 மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும்
 பாவியேன் முன் நிற்குமே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3276 | முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
 மன்னு மாடத் திருக்குறுங்குடி
 நம்பியை நான் கண்டபின்
 சென்னி நீள் முடி ஆதி ஆய
 உலப்பு இல் அணிகலத்தன்
 கன்னல் பால் அமுது ஆகி வந்து என்
 நெஞ்சம் கழியானே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3277 | கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
 வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி
 நம்பியை நான் கண்டபின்
 குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச்
 சோதி வெள்ளத்தினுள்ளே
 எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்
 ஆர்க்கும் அறிவு அரிதே (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3278 | அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி
 நறிய நன் மலர் நாடி
 நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
 குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும்
 திருக்குறுங்குடி அதன்மேல்
 அறியக் கற்று வல்லார்
 வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே            (11)
 | 
 |  | 
		
			|  |  |  |