நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| ஆராவமுதாழ்வார் பேறுகளைத் தாராமையால் ஆழ்வார் தீராத ஆசையுடன் ஆற்றாமைபேசி அலமருதல் (திருக்குடந்தை) |
| 3301 | ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே (1) | |
|
| |
|
|
| 3302 | எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே எம் மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழில் ஏறே செம் மா கமலம் செழு நீர்மிசைக்கண் மலரும் திருக்குடந்தை அம் மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே (2) | |
|
| |
|
|
| 3303 | என் நான் செய்கேன்? யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்? உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள் செல் நாள் எந் நாள்? அந் நாள் உன தாள் பிடித்தே செலக்காணே (3) | |
|
| |
|
|
| 3304 | செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் உலப்பு இலானே எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான் அலப்பு ஆய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே (4) | |
|
| |
|
|
| 3305 | அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன் தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா தொழுவனேனை உன தாள் சேரும்வகையே சூழ்கண்டாய் (5) | |
|
| |
|
|
| 3306 | சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடிசேரும் ஊழ் கண்டிருந்தே தூராக்குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்? வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரிஏறே (6) | |
|
| |
|
|
| 3307 | அரிஏறே என் அம் பொன் சுடரே செங்கண் கரு முகிலே எரி ஏய் பவளக் குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே (7) | |
|
| |
|
|
| 3308 | களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன் வளை வாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயா தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்போது இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே (8) | |
|
| |
|
|
| 3309 | இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் இருத்தும் அம்மானே அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெரு மூர்த்தி திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே (9) | |
|
| |
|
|
| 3310 | வாரா அருவாய் வரும் என் மாயா மாயா மூர்த்தியாய் ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை ஊராய் உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ? (10) | |
|
| |
|
|
| 3311 | உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரண் ஆகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே (11) | |
|
| |
|
|