| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல் | 
					
			
			
      | | 3389 | மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு நீலக் கரு நிற மேக நியாயற்கு
 கோலச் செந்தாமரைக் கண்ணற்கு என் கொங்கு அலர்
 ஏலக் குழலி இழந்தது சங்கே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3390 | சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு செங்கனிவாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
 கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என்
 மங்கை இழந்தது மாமை நிறமே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3391 | நிறம் கரியானுக்கு நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய்ச் சிறுக் கள்வன் அவற்கு
 கறங்கிய சக்கரக் கையவனுக்கு என்
 பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3392 | பீடு உடை நான்முகனைப் படைத்தானுக்கு மாடு உடை வையம் அளந்த மணாளற்கு
 நாடு உடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
 பாடு உடை அல்குல் இழந்தது பண்பே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3393 | பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு மண் புரை வையம் இடந்த வராகற்கு
 தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
 கண்புனை கோதை இழந்தது கற்பே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3394 | கற்பகக் கா அன நல் பல தோளற்கு பொன் சுடர்க் குன்று அன்ன பூந் தண் முடியற்கு
 நல் பல தாமரை நாள் மலர்க் கையற்கு என்
 வில் புருவக்கொடி தோற்றது மெய்யே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3395 | மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு பை அரவின் அணைப் பள்ளியினானுக்கு
 கையொடு கால் செய்ய கண்ண பிரானுக்கு என்
 தையல் இழந்தது தன்னுடைச் சாயே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3396 | சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
 பேயைப் பிணம்படப் பால் உண் பிரானுக்கு என்
 வாசக் குழலி இழந்தது மாண்பே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3397 | மாண்பு அமை கோலத்து எம் மாயக் குறளற்கு சேண் சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
 காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
 பூண் புனை மென்முலை தோற்றது பொற்பே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3398 | பொற்பு அமை நீள் முடிப் பூந் தண் துழாயற்கு மல் பொரு தோள் உடை மாயப் பிரானுக்கு
 நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என்
 கற்பு உடையாட்டி இழந்தது கட்டே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3399 | கட்டு எழில் சோலை நல் வேங்கடவாணனைக் கட்டு எழில் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
 கட்டு எழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
 கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |