| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்) | 
					
			
			
      | | 3466 | வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தி தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
 புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்
 என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்?
 வெள்ளச் சுகம் அவன் வீற்றிருந்த
 வேத ஒலியும் விழா ஒலியும்
 பிள்ளைக் குழா விளையாட்டு ஒலியும்
 அறா திருப்பேரெயில் சேர்வன் நானே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3467 | நானக் கருங் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள்
 நான் இத் தனி நெஞ்சம் காக்கமாட்டேன்
 என் வசம் அன்று இது இராப்பகல் போய்
 தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
 தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
 வானப் பிரான் மணிவண்ணன் கண்ணன்
 செங்கனி வாயின் திறத்ததுவே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3468 | செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
 சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
 தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
 திங்களும் நாளும் விழா அறாத
 தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
 நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ
 நாணும் நிறையும் இழந்ததுவே            (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3469 | இழந்த எம் மாமைத்திறத்துப் போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்
 உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ?
 ஓதக் கடல் ஒலி போல எங்கும்
 எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
 தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
 முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
 அன்னையர்காள் என்னை என் முனிந்தே?            (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3470 | முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருது இடை போய்
 கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
 கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
 முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்?
 முன்னி அவன் வந்து வீற்றிருந்த
 கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே
 காலம்பெற என்னைக் காட்டுமினே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3471 | காலம்பெற என்னைக் காட்டுமின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்
 நீல முகில் வண்ணத்து எம் பெருமான்
 நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான்
 ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த
 நான்மறையாளரும் வேள்வி ஓவா
 கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
 கூடு புனல் திருப்பேரெயிற்கே.             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3472 | பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
 பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி
 பேர்த்து வர எங்கும் காணமாட்டேன்
 ஆரை இனி இங்கு உடையம் தோழீ?
 என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை
 ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?
 என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3473 | கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
 கொண்டு அலர் தூற்றிற்று அது முதலாக்
 கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ
 மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
 நீள் விசும்பும் கழியப் பெரிதால்
 தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த
 தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3474 | சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள் அன்னையர்காள் என்னைத் தேற்ற வேண்டா
 நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு?
 நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை
 கார்வண்ணன் கார்க் கடல் ஞாலம் உண்ட
 கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
 ஏர் வள ஒண் கழனிப் பழன
 தென் திருப்பேரெயில் மாநகரே.             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3475 | நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள்
 சிகர மணி நெடு மாடம் நீடு
 தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
 மகர நெடுங்குழைக் காதன் மாயன்
 நூற்றுவரை அன்று மங்க நூற்ற
 நிகர் இல் முகில்வண்ணன் நேமியான் என்
 நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே?             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3476 | ஊழிதோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும்
 ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
 அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
 கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
 இவை திருப்பேரெயில் மேய பத்தும்
 ஆழி அங்கையனை ஏத்த வல்லார்
 அவர் அடிமைத்திறத்து ஆழியாரே.             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |