| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல் | 
					
			
			
      | | 3576 | அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும் எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி
 அங்கம் சேரும் பூமகள் மண்மகள் ஆய்மகள்
 சங்கு சக்கரக் கையவன் என்பர் சரணமே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3577 | சரணம் ஆகிய நான்மறை நூல்களும் சாராதே மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம்
 கரணப் பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி
 அரணத் திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3578 | ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை
 தாளும் தோளும் கைகளை ஆரத் தொழக் காணேன்
 நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3579 | ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா உரு ஆகி ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே
 காலம் பேர்வது ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் உன்
 கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3580 | கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளியங்குடியும் மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
 அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
 படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3581 | பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம் அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்
 தணியா வெம் நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல
 மணி ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3582 | வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என் திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என்
 உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
 ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே?             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3583 | என்றே என்னை உன் ஏர் ஆர் கோலத் திருந்து அடிக்கீழ் நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான்?
 குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு ஏழும்
 நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3584 | திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம் பெருமான் தன்மையை யார் அறிகிற்பார்? பேசி என்?
 ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை ஆளுடைக்
 கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3585 | கலக்கம் இல்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
 மலக்கம் எய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
 உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது? உரையீரே?             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3586 | உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை வரை ஆர் மாடம் மன்னு குருகூர்ச் சடகோபன்
 உரை ஏய் சொல்தொடை ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
 நிரையே வல்லார் நீடு உலகத்துப் பிறவாரே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |