நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல் |
| 3598 | மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களா சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள் வாசத் தடம்போல் வருவானே ஒருநாள் காண வாராயே (1) | |
|
| |
|
|
| 3599 | காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் நாணி நல் நாட்டு அலமந்தால் இரங்கி ஒருநாள் நீ அந்தோ காண வாராய்! கரு நாயிறு உதிக்கும் கரு மா மாணிக்க நாள் நல் மலைபோல் சுடர்ச் சோதி முடி சேர் சென்னி அம்மானே! (2) | |
|
| |
|
|
| 3600 | முடிசேர் சென்னி அம்மா நின் மொய் பூம் தாமத் தண் துழாய்க் கடிசேர் கண்ணிப் பெருமானே என்று என்று ஏங்கி அழுதக்கால் படிசேர் மகரக் குழைகளும் பவள வாயும் நால் தோளும் துடி சேர் இடையும் அமைந்தது ஓர் தூ நீர் முகில் போல் தோன்றாயே. (3) | |
|
| |
|
|
| 3601 | தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனிவாயும் தே நீர்க் கமலக் கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா மா நீர் வெள்ளி மலைதன்மேல் வண் கார் நீல முகில் போல தூ நீர்க் கடலுள் துயில்வானே எந்தாய்! சொல்லமாட்டேனே (4) | |
|
| |
|
|
| 3602 | சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதித் திருப்பாதம் எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டுபோல் என் உள்ளவா அல்லல் என்னும் இருள் சேர்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுது உண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே? (5) | |
|
| |
|
|
| 3603 | கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா என் அண்ட வாணா என்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால் விண் தன்மேல் தான் மண்மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத்தான் தொண்டனேன் உன் கழல்காண ஒருநாள் வந்து தோன்றாயே (6) | |
|
| |
|
|
| 3604 | வந்து தோன்றாய் அன்றேல் உன் வையம் தாய மலர் அடிக்கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய் செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாய் ஓர் கரு நாயிறு அந்தம் இல்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே (7) | |
|
| |
|
|
| 3605 | ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும் தொக்க மேகப் பல் குழாங்கள் காணும்தோறும் தொலைவன் நான் தக்க ஐவர் தமக்காய் அன்று ஈர் ஐம்பதின்மர் தாள் சாயப் புக்க நல்தேர்த் தனிப்பாகா வாராய் இதுவோ பொருத்தமே? (8) | |
|
| |
|
|
| 3606 | இதுவோ பொருத்தம்? மின் ஆழிப் படையாய் ஏறும் இரும் சிறைப்புள் அதுவே கொடியா உயர்த்தானே என்று என்று ஏங்கி அழுதக்கால் எதுவேயாகக் கருதுங்கொல் இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான் மது வார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே? (9) | |
|
| |
|
|
| 3607 | பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ இன்னே சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள் இறந்து நின்ற பெரு மாயா உன்னை எங்கே காண்கேனே? (10) | |
|
| |
|
|
| 3608 | எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான்? என்று என்று அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர்ச் சடகோபன் செங்கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் இங்கே காண இப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே (11) | |
|
| |
|
|