| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல் | 
					
			
			
      | | 3620 | இருத்தும் வியந்து என்னைத் தன் பொன் அடிக்கீழ் என்று அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு
 பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என் தன்
 கருத்தை உற வீற்றிருந்தான் கண்டு கொண்டே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3621 | இருந்தான் கண்டுகொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும் திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்து அற மன்னி
 பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான்
 தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3622 | அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால்
 பொருள் தான் எனில் மூவுலகும் பொருள் அல்ல
 மருள் தான் ஈதோ? மாய மயக்கு மயக்கே?             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3623 | மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து ஆயன் அமரர்க்கு அரிஏறு எனது அம்மான்
 தூய சுடர்ச்சோதி தனது என் உள் வைத்தான்
 தேசம் திகழும் தன் திருவருள் செய்தே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3624 | திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார் புகழும் புகழ் தான் அது காட்டித் தந்து என் உள்
 திகழும் மணிக் குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
 புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே?             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3625 | பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத் தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும்
 கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்
 திரு மார்பு கால் கண் கை செவ்வாய் உந்தியானே?             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3626 | செவ்வாய் உந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
 செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த
 அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3627 | அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து
 சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன்
 நெறியா வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3628 | வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும் எவரும் வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூவுலகும் தம்
 வயிற்றில் கொண்டு நின்றவண்ணம் நின்ற மாலை
 வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3629 | வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
 மொய்த்து ஏய் திரை மோது தண் பாற்கடலுளால்
 பைத்து ஏய் சுடர்ப் பாம்பு அணை நம் பரனையே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3630 | சுடர்ப் பாம்பு அணை நம் பரனை திருமாலை அடிச் சேர்வகை வண் குருகூர்ச் சடகோபன்
 முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப் பத்தும் சன்மம்
 விடத் தேய்ந்து அற நோக்கும் தன் கண்கள் சிவந்தே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |