| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல் | 
					
			
			
      | | 3631 | கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே
 வெண் பல் இலகு சுடர் இலகு
 விலகு மகர குண்டலத்தன்
 கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
 நான்கு தோளன் குனி சார்ங்கன்
 ஒண் சங்(கு) கதை வாள் ஆழியான்
 ஒருவன் அடியேன் உள்ளானே.             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3632 | அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
 படியே இது என்று உரைக்கலாம்
 படியன் அல்லன் பரம்பரன்
 கடிசேர் நாற்றத்துள் ஆலை
 இன்பத் துன்பக் கழி நேர்மை
 ஒடியா இன்பப் பெருமையோன்
 உணர்வில் உம்பர் ஒருவனே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3633 | உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறற்பொருட்டு என்
 உணர்வின் உள்ளே இருத்தினேன்
 அதுவும் அவனது இன் அருளே
 உணர்வும் உயிரும் உடம்பும்
 மற்று உலப்பிலனவும் பழுதேயாம்
 உணர்வைப் பெற ஊர்ந்து இற ஏறி
 யானும் தானாய் ஒழிந்தானே.             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3634 | யானும் தானாய் ஒழிந்தானை யாதும் எவர்க்கும் முன்னோனை
 தானும் சிவனும் பிரமனும்
 ஆகிப் பணைத்த தனி முதலை
 தேனும் பாலும் கன்னலும்
 அமுதும் ஆகித் தித்தித்து என்
 ஊனில் உயிரில் உணர்வினில்
 நின்ற ஒன்றை உணர்ந்தேனே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3635 | நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
 ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
 உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
 சென்று சென்று பரம்பரம் ஆய்
 யாதும் இன்றித் தேய்ந்து அற்று
 நன்று தீது என்று அறிவு அரிதாய்
 நன்றாய் ஞானம் கடந்ததே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3636 | நன்றாய் ஞானம் கடந்துபோய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
 ஒன்றாய்க் கிடந்த அரும் பெரும் பாழ்
 உலப்பு இல் அதனை உணர்ந்து உணர்ந்து
 சென்று ஆங்கு இன்பத் துன்பங்கள்
 செற்றுக் களைந்து பசை அற்றால்
 அன்றே அப்போதே வீடு
 அதுவே வீடு வீடாமே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3637 | அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறி
 எதுவே தானும் பற்று இன்றி
 யாதும் இலிகள் ஆகிற்கில்
 அதுவே வீடு வீடுபேற்று
 இன்பம் தானும் அது தேறாது
 எதுவே வீடு? ஏது இன்பம்? என்று
 எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3638 | எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும்
 மொய்த்து ஆங்கு அலறி முயங்க தாம்
 போகும்போது உன்மத்தர்போல்
 பித்தே ஏறி அநுராகம்
 பொழியும்போது எம் பெம்மானோடு
 ஒத்தே சென்று அங்கு உள்ளம்
 கூடக் கூடிற்றாகில் நல் உறைப்பே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3639 | கூடிற்றாகில் நல் உறைப்பு கூடாமையைக் கூடினால்
 ஆடல் பறவை உயர் கொடி எம்
 மாயன் ஆவது அது அதுவே
 வீடைப் பண்ணி ஒரு பரிசே
 எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
 ஓடித் திரியும் யோகிகளும்
 உளரும் இல்லை அல்லரே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3640 | உளரும் இல்லை அல்லராய் உளராய் இல்லை ஆகியே
 உளர் எம் ஒருவர் அவர் வந்து என்
 உள்ளத்துள்ளே உறைகின்றார்
 வளரும் பிறையும் தேய் பிறையும்
 போல அசைவும் ஆக்கமும்
 வளரும் சுடரும் இருளும் போல்
 தெருளும் மருளும் மாய்த்தோமே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3641 | தெருளும் மருளும் மாய்த்து தன் திருந்து செம்பொன் கழல் அடிக்கீழ் அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
 அருளப் பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இப் பத்தால்
 அருளி அடிக்கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |