நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல் |
3697 | மை ஆர் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் கையா உன்னைக் காணக் கருதும் என் கண்ணே (1) | |
|
|
|
|
3698 | கண்ணே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சம் எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும் விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை நண்ணாதொழியேன் என்று நான் அழைப்பனே (2) | |
|
|
|
|
3699 | அழைக்கின்ற அடிநாயேன் நாய் கூழை வாலால் குழைக்கின்றது போல என் உள்ளம் குழையும் மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே (3) | |
|
|
|
|
3700 | உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்கண் பெறுவது எதுகொல் என்று பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே (4) | |
|
|
|
|
3701 | அரியாய அம்மானை அமரர் பிரானை பெரியானை பிரமனை முன் படைத்தானை வரி வாள் அரவின் அணைப் பள்ளிகொள்கின்ற கரியான் கழல் காணக் கருதும் கருத்தே (5) | |
|
|
|
|
3702 | கருத்தே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சத்து இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம் விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி உயரத்து ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே (6) | |
|
|
|
|
3703 | உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்பால் அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா மிகும் தானவன் மார்வு அகலம் இரு கூறா நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே (7) | |
|
|
|
|
3704 | உரு ஆகிய ஆறு சமயங்கட்கு எல்லாம் பொரு ஆகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும் அரு ஆகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம் கரு ஆகிய கண்ணனை கண்டுகொண்டேனே (8) | |
|
|
|
|
3705 | கண்டுகொண்டு என் கண் இணை ஆரக் களித்து பண்டை வினையாயின பற்றோடு அறுத்து தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் அண்டத்து அமரர் பெருமான் அடியேனே (9) | |
|
|
|
|
3706 | அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானை குன்றாமல் உலகம் அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே (10) | |
|
|
|
|
3707 | ஆறா மதயானை அடர்த்தவன் தன்னை சேறு ஆர் வயல் தென் குருகூர்ச் சடகோபன் நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் ஏறே தரும் வானவர் தம் இன் உயிர்க்கே (11) | |
|
|
|
|