| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை) | 
					
			
			
      | | 3719 | உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
 தெருவு எல்லாம் காவி கமழ் திருக்காட்கரை
 மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே?             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3720 | நினைதொறும் சொல்லும்தொறும் நெஞ்சு இடிந்து உகும் வினைகொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
 சுனைகொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
 நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3721 | நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மைசெய்து என் உயிர் ஆய் என் உயிர் உண்டான்
 சீர் மல்கு சோலைத் தென் காட்கரை என் அப்பன்
 கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன்             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3722 | அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
 வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
 சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு அருளே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3723 | திரு அருள் செய்பவன் போல என்னுள் புகுந்து உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான்
 திரு வளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
 கரு வளர் மேனி என் கண்ணன் கள்வங்களே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3724 | என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க் கோது இது
 புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல்
 என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3725 | காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
 ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
 கோள் குறைபட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3726 | கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான் நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்
 காள நீர் மேகத் தென் காட்கரை என் அப்பற்கு
 ஆள் அன்றே பட்டது? என் ஆர் உயிர் பட்டதே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3727 | ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது பேர் இதழ்த் தாமரைக் கண் கனி வாயது ஓர்
 கார் எழில் மேகத் தென் காட்கரை கோயில் கொள்
 சீர் எழில் நால் தடம் தோள் தெய்வவாரிக்கே?             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3728 | வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
 பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
 கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3729 | கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
 வடிவு அமை ஆயிரத்து இப் பத்தினால் சன்மம்
 முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |