நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்) |
3730 | எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் செங்கால மட நாராய் திருமூழிக்களத்து உறையும் கொங்கு ஆர் பூந் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய் நும் கால்கள் என் தலைமேல் கெழுமீரோ நுமரோடே (1) | |
|
|
|
|
3731 | நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய் அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும் எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மால் இழிப்புண்டு? தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே? கேளீரே (2) | |
|
|
|
|
3732 | தக்கிலமே கேளீர்கள்! தடம் புனல்வாய் இரை தேரும் கொக்கு இனங்காள் குருகு இனங்காள் குளிர்மூழிக்களத்து உறையும் செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக் கமலத்து இலைப் போலும் திருமேனி அடிகளுக்கே (3) | |
|
|
|
|
3733 | திருமேனி அடிகளுக்குத் தீவினையேன் விடு தூதாய் திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள் திருமேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத் தன் திருமேனி ஒளி அகற்றி தெளி விசும்பு கடியுமே? (4) | |
|
|
|
|
3734 | தெளி விசும்பு கடிது ஓடி தீ வளைத்து மின் இலகும் ஒளி முகில்காள் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்கு தெளி விசும்பு திருநாடாத் தீவினையேன் மனத்து உறையும் துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்புமினே (5) | |
|
|
|
|
3735 | தூது உரைத்தல் செப்புமின்கள் தூ மொழி வாய் வண்டு இனங்காள் போது இரைத்து மது நுகரும் பொழில் மூழிக்களத்து உறையும் மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம் தூது உரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே (6) | |
|
|
|
|
3736 | சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த படர் புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கயக்கண் சுடர் பவள வாயனைக் கண்டு ஒருநாள் ஓர் தூய் மாற்றம் படர் பொழில்வாய்க் குருகு இனங்காள் எனக்கு ஒன்று பணியீரே. (7) | |
|
|
|
|
3737 | எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள் கனக்கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும் புனக்கொள் காயா மேனிப் பூந் துழாய் முடியார்க்கே (8) | |
|
|
|
|
3738 | பூந் துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையாருக்கு ஏந்து நீர் இளம் குருகே திருமூழிக் களத்தாருக்கு ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப தாம் தம்மைக்கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே (9) | |
|
|
|
|
3739 | தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து மிக இன்பம் பட மேவும் மேல் நடைய அன்னங்காள் மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என் அகமேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே (10) | |
|
|
|
|
3740 | ஒழிவு இன்றித் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடரை ஒழிவு இல்லா அணி மழலைக் கிளிமொழியாள் அலற்றிய சொல் வழு இல்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த அழிவு இல்லா ஆயிரத்து இப் பத்தும் நோய் அறுக்குமே (11) | |
|
|
|
|