நான்காம் ஆயிரம் நம்மாழ்வார் திருவாய் மொழி
|
| தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்) |
| 3741 | அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் குறுக்கும் வகை உண்டுகொலோ கொடியேற்கே? (1) | |
|
| |
|
|
| 3742 | கொடி ஏர் இடைக் கோகனகத்தவள் கேள்வன் வடி வேல் தடம் கண் மடப் பின்னை மணாளன் நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய் அடியேன் அணுகப்பெறும் நாள் எவைகொலோ? (2) | |
|
| |
|
|
| 3743 | எவைகொல் அணுகப் பெறும் நாள் என்று எப்போதும் கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன் நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய் அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே (3) | |
|
| |
|
|
| 3744 | நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் மீளா அடிமைப்பணி செய்யப் புகுந்தேன் நீள் ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் வாள் ஏய் தடம் கண் மடப் பின்னை மணாளா (4) | |
|
| |
|
|
| 3745 | மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய் கண் ஆரக் களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்டே? (5) | |
|
| |
|
|
| 3746 | கண்டே களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்கள் தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே? (6) | |
|
| |
|
|
| 3747 | கோ ஆகிய மா வலியை நிலம் கொண்டாய் தேவாசுரம் செற்றவனே திருமாலே நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ ஆஆ அடியான் இவன் என்று அருளாயே (7) | |
|
| |
|
|
| 3748 | அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன் அடிக் கீழ்ப் புக வைப்பாய் மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே தரு தென் திருநாவாய் என் தேவே (8) | |
|
| |
|
|
| 3749 | தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன் மூவர் முதல்வன் ஒரு மூவுலகு ஆளி தேவன் விரும்பி உறையும் திருநாவாய் யாவர் அணுகப் பெறுவார் இனி? அந்தோ (9) | |
|
| |
|
|
| 3750 | அந்தோ அணுகப் பெறும் நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன் கொந்து ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய் வந்தே உறைகின்ற எம் மா மணி வண்ணா. (10) | |
|
| |
|
|
| 3751 | வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானைத் திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன் பண் ஆர் தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லார் மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே (11) | |
|
| |
|
|