| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| திருக்கண்ணபுரம் சேருமாறு பிறருக்கு உபதேசம் செய்தல் (திருக்கண்ணபுரம்) | 
					
			
			
      | | 3763 | மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட காலை மாலை கமல மலர் இட்டு நீர்
 வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
 ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3764 | கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின் நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
 வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
 உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3765 | தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய் விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
 வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து
 அண்ட வாணன் அமரர் பெருமானையே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3766 | மானை நோக்கி மடப் பின்னை தன் கேள்வனை தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
 வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
 தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3767 | சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
 அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
 தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே            (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3768 | அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
 நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
 அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3769 | மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்
 செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து
 ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3770 | அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
 மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம்
 பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3771 | பாதம் நாளும் பணிய தணியும் பிணி ஏதம் சாரா எனக்கேல் இனி என்குறை?
 வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
 ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3772 | இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை? அல்லி மாதர் அமரும் திருமார்பினன்
 கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
 சொல்ல நாளும் துயர் பாடு சாராவே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3773 | பாடு சாராவினை பற்று அற வேண்டுவீர் மாடம் நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
 பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
 பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |