| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல் (திருவனந்தபுரம்) | 
					
			
			
      | | 3785 | கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
 விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
 தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3786 | இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
 மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம்
 ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பர் ஊரே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3787 | ஊரும் புள் கொடியும் அஃதே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் சேரும் தண் அனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
 தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
 பேரும் ஓர் ஆயிரத்துள் ஒன்று நீர் பேசுமினே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3788 | பேசுமின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம்
 நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
 பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3789 | புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி எண்ணுமின் எந்தை நாமம் இப் பிறப்பு அறுக்கும் அப்பால்
 திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
 அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3790 | அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர்
 நமர்களோ சொல்லக் கேள்மின் நாமும் போய் நணுகவேண்டும்
 குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3791 | துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு அணைப் பள்ளி கொண்டான்
 மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம்
 கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3792 | கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
 படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
 நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக்கு அறியச் சொன்னோம்.            (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3793 | நாம் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணிய ஆன சேமம் நன்கு உடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்தபுரம்
 தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு
 வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே.            (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3794 | மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும் ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று
 சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
 ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம் இல் புகழினாரே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3795 | அந்தம் இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி தன்னைக் கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள்
 ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
 பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |