| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல் | 
					
			
			
      | | 3807 | சார்வே தவநெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார் மேக வண்ணன் கமல நயனத்தன்
 நீர் வானம் மண் எரி கால் ஆய் நின்ற நேமியான்
 பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3808 | பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கு அருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும்
 திரு மெய் உறைகின்ற செங்கண் மால் நாளும்
 இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3809 | ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவு உடையம்? மீள்கின்றது இல்லை பிறவித் துயர் கடிந்தோம்
 வாள் கெண்டை ஒண்கண் மடப் பின்னை தன் கேள்வன்
 தாள் கண்டுகொண்டு என் தலைமேல் புனைந்தேனே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3810 | தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
 மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
 நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3811 | நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன்
 மெச்சப்படான் பிறர்க்கு மெய்போலும் பொய் வல்லன்
 நச்சப்படும் நமக்கு நாகத்து அணையானே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3812 | நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
 மாகத்து இள மதியம் சேரும் சடையானைப்
 பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3813 | பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
 மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான்
 அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3814 | ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான் ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
 பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
 வாழி என் நெஞ்சே! மறவாது வாழ்கண்டாய்             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3815 | கண்டேன் கமல மலர்ப் பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின எல்லாம்
 தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக
 பண்டே பரமன் பணித்த பணிவகையே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3816 | வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
 திசைதோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
 தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3817 | பற்று என்று பற்றி பரம பரம்பரனை மல் திண் தோள் மாலை வழுதி வளநாடன்
 சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
 கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |