| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| ஆழ்வார் பரம பக்தியால் கனிந்து திருமாலைத் தாம் அடைந்தமையை அருளிச்செய்தல் | 
					
			
			
      | | 3873 | முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
 தனியேன் ஆர் உயிரே என் தலைமிசையாய் வந்திட்டு
 இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே            (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3874 | மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூங் குழலாள் திரு ஆணை நின் ஆணைகண்டாய்
 நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
 கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ!            (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3875 | கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ! என் பொல்லாக் கருமாணிக்கமே ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்
 மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம்
 நாவிக் கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3876 | உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள்மிசை நீயே ஓ அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
 உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
 எம்பரம் சாதிக்கலுற்று என்னைப் போர விட்டிட்டாயே            (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3877 | போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான் ஆரைக் கொண்டு எத்தை? அந்தோ எனது என்பது என்? யான் என்பது என்?
 தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆர் உயிரை
 ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே                         (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3878 | எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டொழியாய்
 புனக் காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனிவாய்
 உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு அன்பா என் அன்பேயோ            (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3879 | கோல மலர்ப்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
 கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
 நீலக் கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனிப் போக்குவனோ?            (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3880 | பெற்று இனிப் போக்குவனோ உன்னை என் தனிப் பேருயிரை? உற்ற இருவினை ஆய் உயிர் ஆய் பயன் ஆயவை ஆய்
 முற்ற இம் மூவுலகும் பெரும் தூறு ஆய் தூற்றில் புக்கு
 முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3881 | முதல் தனி வித்தேயோ முழு மூவுலகு ஆதிக்கு எல்லாம் முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
 முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்
 முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீ ஓ!             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3882 | சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீ ஓ
 சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ
 சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3883 | அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
 அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
 அவா இல் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே            (11)
 | 
 |  | 
		
			|  |  |  |