மூன்றாம் ஆயிரம் இயற்பா திருமங்கை ஆழ்வார்
|
| பிற்சேர்க்கைப் பாடல்கள் |
மண்ணில் பொடிப் பூசி வண்டு இரைக்கும் பூச் சூடி பெண்ணை மடல் பிடித்துப் பின்னே அண்ணல் திருநறையூர் நின்ற பிரான் தேர் போகும் வீதி பொரு முறையால் செல்வம் புரிந்து | |
|
| |
|
|
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் தன் அருளும் ஆகமும் தாரானேல் பின்னைப்போய் ஒண் துறை நீர் வேலை உலகு அறிய ஊர்வன் நான்- வண்டு அறை பூம் பெண்ணை மடல் | |
|
| |
|
|
ஊராது ஒழியேன் உலகு அறிய ஒள்-நுதலீர் சீர் ஆர் முலைத்தடங்கள் சேரளவும் பார் எல்லாம் அன்று ஓங்கிநின்று அளந்தான் நின்ற திருநறையூர் மன்று ஓங்க ஊர்வன்-மடல் | |
|
| |
|
|
இடம் கொண்ட நெஞ்சத்து இணங்கிக் கிடப்பன-என்றும் பொன்னித் தடம் கொண்ட தாமரை சூழும் மலர்ந்த தண் பூங் குடந்தை விடம் கொண்ட வெண் பல் கருந் துத்தி செங் கண் தழல் உமிழ்வாய் படம் கொண்ட பாம்பு-அணைப் பள்ளிகொண்டான் திருப்பாதங்களே | |
|
| |
|
|