| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| தனியன்கள் | 
					
			
			
      | | வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ்மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
 முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
 இதத் தாய் இராமாநுசன்
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | மிக்க இறை நிலையும் மெய் ஆம் உயிர் நிலையும் தக்க நெறியும் தடை ஆகி தொக்கு இயலும்
 ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர் கோன்
 யாழின் இசை வேதத்து இயல்
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும் இனத்தாரை அல்லாது இறைஞ்சேன் தனத்தாலும்
 ஏதும் குறைவு இலேன் எந்தை சடகோபன்
 பாதங்கள் யாமுடைய பற்று
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | பக்தாம்ருதம் விஸ்வ ஜநாநுமோதநம் ஸர்வார்த்த தம் ஸ்ரீசடகோப வாங்மயம்
 ஸஹஸ்ர சாகோபநிஷத்ஸமாகமம்
 நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | திருவழுதி நாடு என்றும் தென் குருகூர் என்றும் மருவினிய வண் பொருநல் என்றும் அரு மறைகள்
 அந்தாதி செய்தான் அடி இணையே எப்பொழுதும்
 சிந்தியாய் நெஞ்சே தெளிந்து
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | ஏய்ந்த பெரும் கீர்த்தி இராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெரும்
 சீர் ஆர் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
 பேராத உள்ளம் பெற
 | 
 |  | 
		
			|  |  |  |