"திரு உளத்திற்கு
உணராத ஒன்று ஈங்கு உண்டோ? செய்
மணத்தோடு,
இரு உளத்திற்கு உணர்வு ஒன்றாய் இசைத்த முறை நன்று
அறியக்
கரு உளத்திற்கு உணர்வு உண்டோ? கருத்து உயர்ந்து
தூண்டும் நசை
வரு உளத்தில், கருணை வலோன், வாய்ந்த தயை
வழங்குவனே." |
"இறைவனின் திருவுளத்திற்கு
அறியப்படாத ஒன்று இவ்வுலகில்
உண்டோ? செய்து கொண்ட திருமணத்தோடு, இரண்டு உள்ளங்களுக்கும்
உணர்வு ஒன்றேயாக அவ்விறைவன் பொருத்தி வைத்த முறையை நன்கு
அறிய என் இருண்ட உள்ளத்திற்கு உணர்வு உண்டோ? கருணையும்
அதனை நிறைவேற்றும் வல்லமையும் கொண்டுள்ள ஆண்டவன் கருத்து
உயர்ந்து தூண்டும் ஆசை தோன்றும் உள்ளத்திற்குத் தனது சிறந்த தயவை
வழங்குவான்.
உணராத + ஒன்று
- 'உணராத வொன்று' என வர வேண்டியது,
தொகுத்தல் விகாரமாய் 'உணராதொன்று' என நின்றது.
|
19
|
ஆசடைபூ
வனத்துன்னை யமலனெனக் களித்ததனால்
மாசடைபூ ரியரொத்தென் மனமலரு மென்றுணர்த்தப்
பாசடைபூங் கொடிதந்து பாசறைதீ ருரஞ்செய்யுந்
தேசடைபூ ணறிவுன்னைச் செழுந்துணையாய்த் தந்தனளே. |
| |
"ஆசு அடை பூ வனத்து
உன்னை அமலன் எனக்கு
அளித்ததனால்.
மாசு அடை பூரியர் ஒத்த என் மனம் மலரும் என்று உணர்த்த
பாசு அடை பூங் கொடி தந்து, பாசறை தீர் உரம் செய்யும்
தேசு அடை பூண் அறிவு உன்னைச் செழுந் துணையாய்த்
தந்தனனே." |
"குற்றங்கள்
நிறைந்த இப்பூவுலகில் குற்றம் எதுவும் இல்லாத
ஆண்டவன் உன்னை மணவாட்டியாக எனக்குத் தந்தமையால், மாசு
நிறைந்த கீழ் மக்களுக்கு ஒப்பான என் மனம் மலர்ச்சி பெறும் என்று
உணர்த்தவே, பசுமையான இலைகளோடு கூடிய மலர்க்கொடியை
அடையாளமாகத் தந்து,
|