பக்கம் எண் :

முதற் காண்டம்400

"வான் செய்த சுடரினும் தூய் தெரு ளோனே, மருள் அற்ற வலி
                                      நல்லோனே,
தேன் செய்த மலர் ஈந்து சிறந்தமணம் கூட்டி, நினைச் சேய்
                                      என்று ஈனும்
மீன் செய்த முடியாளைத் தந்து, தந்த நயன் அறியா வினைப்
                                      பயத்தால்
யான் செய்த குறை குணியாது இனிது அளித்தி, நினைவினும்
                               ஊங்கு இரக்கம் மிக்கோய்!

     "வானத்தை ஒளிரச் செய்த ஞாயிறு முதலிய சுடர்களைக் காட்டிலும்
தூய்மையான அறிவுத் தெளிவு கொண்டவனே, மயக்கமற்ற வல்லமையோடு
நல்லியல்புகளெல்லாம் உடையவனே, நினைக்கும் அளவிற்கு மேலாக
இரக்கம் மிக்கவனே, தேன் பொருந்திய மலர்க் கொடியை அடையாளமாகத்
412 தந்து, அதன்மூலம் சிறந்த திருமணத்தை நிறை வேற்றினாய்; உன்னையே
மகனாகப் பெறும், விண்மீன்களால் அமைந்த முடியை அணிந்த மரியாளை
எனக்கு மனைவியாகத் தந்தாய்; அதன் மேலும் எனக்குத் தந்த
நன்மைகளையெல்லாம் அறியாத செயலின் விளைவாக நான் செய்த
குற்றத்தையும் கருதாமல் என்னை இனிது காத்தாய்!
 
                     14
செய்ப்படுவா னுலகினோடு திணையாவும் படைத்தளித்தாள்
                               சிறந்த கோவே
மொய்ப் படுமார் கலியுடுத்த பாரினினக் கன்னையெனு
                               முகுளங் கன்னி
கைப்படுவா னடியேனைத் தெரிந்தாயோ வதற்பின்யான்
                               கசடு லாவும்
பொய்ப்படுவா குலமெய்திப் போயிவள்நற் புடையகல
                               வுன்னி னேனே.
 
"செய்ப் படு வான் உலகினோடு திணை யாவும் படைத்து அளித்து
                               ஆள் சிறந்த கோவே,
மொய்ப் படும் ஆர்கலி உடுத்த பாரில் நினக்கு அன்னை எனும்
                               முகுளம் கன்னி
கைப்படுவான் அடியேனைத் தெரிந்தாயோ! அதன் பின் யான்
                               கசடு உலாவும்
பொய்ப் படு ஆகுலம் எய்தி, போய் இவள் நல்புடை அகல
                               உன்னினேனே!