சூசையின்
புகழ்மாலை
- விளம், கூவிளம்,
கூவிளம், கூவிளம், கூவிளம், கூவிளங்காய்
72 |
இற்றையெ
லாமுமி யற்றிய காலையி னத்திய லாநயமாய்
மற்றையெ லாமும னத்தினு சாவும லர்த்திரு வாகையினான்
கற்றையு லாவுப ளிக்குரு வாமமி கக்கதிர் வீசியுரு
ளொற்றையு லாவிர தக்கதி ராகவு வப்பலை மூழ்கினனே. |
|
இற்றை எலாமும்
இயற்றிய காலை, இனத்து இயலா நயம் ஆய்,
மற்றை எலாமும் மனத்தின் உசாவும் மலர்த்திரு வாகையினான்,
கற்றை உலாவு பளிக்கு உரு வாமம் மிக, கதிர் வீசி உருள்
ஒற்றை உலாவு இரதக் கதிர் ஆக, உவப்பு அலை மூழ்கினனே. |
இவற்றை எல்லாம்
ஆண்டவன் நிகழ்த்தியபோது, இனமாக வேறு
ஒன்றை உவமை சொல்ல இயலாத இன்பம் கொண்டு, மேலும் அவற்றையெல்லாம் தன் மனத்துள்
ஆராயும் அழகிய மலர்க் கொடியை
உடையவனாகிய சூசை, கதிர்த்திரள் வந்து படியும் கண்ணாடியைக்
காட்டிலும் தன் அழகு மிகுந்து, கதிர் வீசி ஒற்றைச் சக்கரத்தில் உலாவும்
தேரில் வரும் ஆதவன்போல் ஆகி, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான்.
பளிக்குரு - பளிங்கு
+ உரு: புணர்ச்சியில் மென்றொடர்க்
குற்றியலுகரம் வன்றொடர் ஆயிற்று.
73 |
வென்னைவி
ரித்திடு கூளிந டுக்கிய வேதமொ ழித்திறலோன்
பொன்னைவி ரித்ததன் மீதுபு தைத்தமின் மாலையி
றுத்தியபோற்
கொன்னைவி ரித்தநி லாவினி றத்தவிர் கோலமு
டுத்தெனையா
ளன்னைவி ரித்தநி லாவுண வத்திற றானும்வி ரித்தனனால். |
|