பக்கம் எண் :

முதற் காண்டம்533

 
"மின் வளர் நவ மணி மிடைந்த போதிகை,
பொன் வளர் தூண்மிசை, பொருத்தி, செஞ்சுட-
ரின் வளர் இள வெயில் எறிந்த மாளிகை,
கொன் வளர் நசைக்கு இணை, கொண்டது இல்லதே.

     "வீணே வளரும் என் ஆசைக்கு ஈடாக, பொன்னாற் செய்த உயர்ந்த
தூணின் மீது மின்னல் ஒளி பெருக்கும் ஒன்பது வகை மணிகள் செறிந்த
போதிகையைப் பொருத்தி,. செந்நிறச் சுடர் கொண்ட கதிரவன் போல்
வளரும் இள வெயிலைப் பரப்பிய மாளிகையும் கொண்டிருக்கவில்லையே!

     போதிகை - உத்திரம் தாங்கி. செஞ்சுடர் - கதிரவன்: அடையடுத்த
ஆகுபெயர். நவமணி 11 : 18 காண்க.

 
                  116
இறைவனை யருத்தியோ டிருத்த லாகநூற்
றுறைவனை யுணர்வினாய் பணியைச் சொல்லெனா
வறைவனை குவானசைக் கலைந்த நெஞ்சினான்
சிறைவனை வயிற்றுறை சேயை யேற்றுவான்.
 
"இறைவனை அருத்தியோடு இருத்தல் ஆக, நூல்
துறை வனை உணர்வினாய், பணியைச் சொல்" எனா,
அறைவன், நைகுவான், நசைக்கு அலைந்த நெஞ்சினான்;
சிறை வனை வயிற்று உறை சேயை ஏற்றுவான்.

     "நூல் வகைகளெல்லாம் உள்ளடக்கிய உணர்வு படைத்தவளே,
பிறக்கவிருக்கும் ஆண்டவனை ஆசையோடு அமர்த்தி வைப்பதற்கு
என்னாலான பணியை நீயே எடுத்துச் சொல்வாய்" என்று, ஆசையால்
அலைந்த நெஞ்சங் கொண்ட சூசை மரியாளை நோக்கிக் கூறுவான்;
ஆசை நிறைவேறாதென்று வருந்துவான்; சிறைபோல் அமைந்த மரியாள்
வயிற்றினுள் தங்கியிருக்கும் அம் மகனைப் போற்றுவான்.

 
                117
ஏற்றுவா னன்பினுள் ளுருகி யின்புறத்
தூற்றுவா னிருவிழி சொரிந்த மாரியைப்
போற்றுவா வைற்குமேற் பொழிவ ரத்தொகை
சாற்றுவா னுணர்குவான் மக்க டன்மையோ.