"உன்னை
விட்டு ஒரு நொடிப்பொழுது பிரிந்து போக நேர்ந்தாலும்,
மின்னி விழுந்த இடி தன் நாவினால் மலையைப் பிளந்து இரு வேறு
பிரிவாகச் செய்வதுபோல் அதனைக் கருதி, நான் உயிர் பிழைத்திருக்க
இயலாதவன் ஆவேன். இதனை நீ கருதி, நான் அடையும் துன்பத்தை
நீக்க ஆண்டவனிடமே வழிகேட்டு, அவன் செய்யும் ஏவலை ஆராய்ந்து,
நான் செய்யத் தக்கது என்னவென்று நீயே சொல்வாய்" என்றான்.
-
- காய், - - காய், - - காய், - - காய்
9 |
என்றருமா
மறைவடிவ மேந்துதவ னிவைகூறப்
பின்றருயா வையுமுணர்ந்தும் பேரிறையோன் றனைத்தாங்குந்
துன்றருமா மாட்சிமையா டன்றுணைவன் சொற்பணிய
வன்றருமா மகவினைத்தாழ்ந் ததங்கியற்றும் பணிகேட்டாள். |
|
என்று,
அரு மா மறை வடிவம் ஏந்து தவன் இவை கூற,
பின் தரு யாவையும் உணர்ந்தும், பேர் இறையோன் தனைத் தாங்கும்
துன்று அரு மா மாட்சிமையாள், தன் துணைவன் சொல் பணிய,
அன்று அரு மா மகவினைத் தாழ்ந்து, அதற்கு இயற்றும் பணி
கேட்டாள். |
என்று மேலே காட்டியவாறு,
அரிய சிறந்த வேத வடிவம் தாங்கிய
தவத்தோனாகிய சூசை இவற்றைக் கூறவும், பெருமை வாய்ந்த ஆண்டவனைக்
கருத்தாங்கும் அடைதற்கரிய பெருமாண்பு கொண்ட மரியாள், பின் நிகழ
இருப்பன யாவற்றையும் தான் உணர்ந்திருந்தும், தன் கணவன் சொல்லுக்குப்
பணிய வேண்டுமென்ற கருத்தோடு அன்று தன் அரிய பெருமை வாய்ந்த
மகனை வணங்கி, அதற்குத் தாம் செய்ய வேண்டிய பணி யாதென்று
கேட்டாள்.
10 |
கட்பதருந்
தயைக்கிறைவன் கேட்டுரைத்த திருவுளமே
கோட்பதருங் குணக்கிழத்தி கொழுதனுளத் தெழச்சொல்லி
வட்பதரு மணமணத்த வுயிரிரண்டும் வேறாகா
வாட்பதரு நயத்திருவர் மாநகர்க்கே குதுமென்றாள். |
|